Doctor Vikatan: ஹேர் எக்ஸ்டென்ஷன் சிகிச்சைகள்... கூந்தலை வளர்க்குமா, பாதிக்குமா?
தென்காசி: குளியறையில் கொலைசெய்யப்பட்ட பெண்; சிக்கிய பால்காரர்... திருமணம் மீறிய உறவு காரணமா?
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகிலுள்ள அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர் அய்யங்கண்ணு. இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி முருகசெல்வி. இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது மார்கழி மாதம் என்பதால், முருகசெல்வி, அப்பகுதியிலுள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு அதிகாலையில் பஜனை குழுவுடன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கமாம்.

ஆனால், நேற்று காலை அவர் பஜனைக்கு வரவில்லையாம். இந்த நிலையில், வழக்கமாக முருகசெல்வியின் வீட்டிற்கு பால் கொண்டு செல்லும் அதே பகுதியைச் சேர்ந்த சரத் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர், முருகசெல்வியின் வீட்டின் குளியலறை குழாயில் இருந்து ரத்தம் கசிந்து வருவதாகக் கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர், சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர். இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
இந்தக் கொலைச் சம்பவம், நகைக்காகவா அல்லது வேறு ஏதும் முன்பகையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். முருகசெல்வியின் செல்போன் அழைப்புகள், அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முருகசெல்வியின் வீட்டிற்கு தினமும் பால் கொண்டு வரும் சரத் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணையில், ”எனக்கு கடன் பிரச்னை உள்ளது, தனியாக உள்ள முருகசெல்வியிடம் நகையை பறித்தால் கடன் பிரச்னை தீர்ந்துவிடும் என்பதால், முருகசெல்வியை நானே கொலை செய்தேன்” எனக் கூறியுள்ளார். அதே நேரத்தில் கொலை செய்யப்பட்ட முருகசெல்விக்கும், கைது செய்யப்பட்ட பால்காரர் சரத்திற்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால், சரத், முருகசெல்வியை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. சரத்திட,ம் இருந்து 4 சவரன் தங்கநகை, கொலை செய்ய பயன்படுத்திய இரும்புக்க ம்பியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.



















