Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
ராஜஸ்தான்: திருட வந்த இடத்தில் எக்ஸாஸ் பேன் துளையில் சிக்கிக் கொண்ட நபர்; மீட்டுக் கைதுசெய்த போலீஸ்!
ராஜஸ்தான் மாநிலம், கோடா என்ற இடத்தில் வசிப்பவர் சுபாஷ் குமார். இவர் சம்பவத்தன்று வெளியில் சென்று இருந்தார். அவரின் மனைவியும் வெளியில் சென்றுவிட்டு அதிகாலை ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வெளியில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. சுஷாஷ் குமார் மனைவி வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றபோது, சமையல் அறையில் திருடன் ஒருவன் மாட்டி இருந்தான். சமையல் அறையில் எக்ஸாஸ் பேன் மாட்டுவதற்காக துளை ஒன்று போடப்பட்டு இருந்தது.
அந்த துளையில் திருடன் ஒருவன் பாதி உடல் வீட்டிற்குள் வந்த நிலையில் வெளியேயும் செல்ல முடியாமல் உள்ளேயும் செல்ல முடியாமல் திரைப்படத்தில் வருவது போன்று அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான். உடனே சுபாஷ் குமார் மனைவி பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அத்திருடனை துளையில் இருந்து பத்திரமாக மீட்டு, கைதுசெய்தனர்.

பிடிபட்ட திருடனுடன் வேறு ஒரு நபரும் வந்துள்ளார். இந்த திருடன் துளையில் சிக்கிக் கொண்டதால் அவரை மீட்க தப்பியோடிய நபர் முயற்சி செய்துள்ளார். ஆனால் மீட்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். திருடர்கள் இரண்டு பேரும் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்துள்ளனர்.
காரை வெளியில் நிறுத்திவிட்டு மெயின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுள்ளனர். உள்ளே இருந்த வீட்டுக் கதவை திறந்த முடியாத காரணத்தால் சமையல் அறை வழியாக வீட்டிற்குள் செல்ல முடிவு செய்து, ஒரு திருடனை மற்றொரு திருடன் மேலே ஏற்றிவிட்டு இருக்கிறான் என்பது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. தப்பியோடிய திருடனை போலீஸார் தேடி வருகின்றனர். திருடன் எக்ஸாஸ் பேன் துளையில் சிக்கிக்கொண்டு திண்டாடும் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.



















