மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்...
'மேக்னா'ஸ் ஃபார்ம்: கால்நடை வளர்ப்பு, மீன் பண்ணை! - இயற்கை விவசாயத்தில் 'பொன்மகள் வந்தாள்' மேக்னா
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' சீரியலில் நடித்த மேக்னாவை நினைவிருக்கிறதா? அப்பாவி மருமகளாக வந்து அனைவரின் ஆதரவையும் அள்ளினாரே, அவரேதான்.
பிறகு 'பொன்மகள் வந்தாள்' சீரியலிலும் நடித்தார். ஆனால் அதன்பிறகு தமிழ் சீரியல் ஏரியாவில் ஆளையே பார்க்க முடியவில்லை.
எங்கிருக்கிறார் எனத் தேடிப் பிடித்துப் பேசினோம்.

இப்ப ரெண்டு புராஜெக்ட் போயிட்டிருக்கு!
''தமிழ் சினிமாவுல எனக்கு நல்ல அறிமுகம்தான் கிடைச்சது. ஆனாலும் சில சந்தர்ப்ப சூழல்ல தொடர்ந்து அங்க பண்ண முடியல. அதனால சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்பிட்டேன். மலையாள சேனல்கள் சில ஷோக்கள் பண்ணிட்டிருந்த எனக்கு சீரியல் வாய்ப்பும் வந்தது.
இப்ப ரெண்டு புராஜெக்ட் போயிட்டிருக்கு. மலையாள சினிமாவுலயும் கேட்டுட்டு இருக்காங்க.
'மேக்னா'ஸ் ஃபார்ம்'
தமிழ் இன்டஸ்ட்ரியில வேலை செய்யப் பிடிக்கும்னாலும் தொடர்ந்து வாய்ப்பு இருந்தாதானே அங்க இருக்க முடியும்?
இப்ப சொந்த ஊர்ல வீட்டோட இருக்கிற ஒரு சந்தோஷமும் சேர்ந்துகிடுச்சு. இன்னொரு முக்கியமான விஷயம்... நடிப்போட எனக்குப் பிடிச்ச இன்னொரு விஷயத்தையும் இங்க பண்ணிட்டிருக்கேன். அது இயற்கை விவசாயம்.

இது என்னுடைய ரொம்ப நாள் ஆசை. வீட்டுக்குத் தேவையான காய்கறிகளுக்காச்சும் தோட்டம் வாங்கி விவசயம் செய்யணும்னு நினைச்சேன். அதுக்கு கையில கொஞ்சம் காசு சேரணும்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன். கொஞ்சம் காசு சேர்ந்ததும் எங்க ஊர்லயே ஒரு ஆறு இருக்கு. அந்த ஆற்றின் கரையில் கொஞ்சம் நிலம் வாங்கி 'மேக்னா'ஸ் ஃபார்ம்'னு தொடங்கியாச்சு.
காய்கறிகள், பழங்கள், கீரை பயிரிடறதோட விவசாய வேலைகளுக்குத் தேவைப்படுகிற கால்நடைகளும் வளர்க்கிறோம். என் அம்மா எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்காங்க. ஆத்துக்குளள கூடு அமைச்சு மீன் பண்ணையும் வச்சிருக்கேன்.
முதல்ல வீட்டுக்கு மட்டும்னு தொடங்கினாலும் இப்ப பிசினஸ்ங்கிற இடத்துக்கு கொஞ்சம் நகர்ந்திருக்கு. செடிகளுக்கு ரசாயான உரங்கள்ங்கிற பேச்சுக்கே இடமில்லை.
சீரியல் ஷூட்டிங், அதை விட்டா இயற்கை விவசாயம்னு லைஃப் சந்தோஷமா போயிட்டிருக்கு'' என்கிறார்.
















