செய்திகள் :

`ரூ.90,000 வாடகை கொடுத்தும் தண்ணீர் பிரச்னை'- புலம்பும் மும்பை இளைஞர் | வைரலாகும் வீடியோ!

post image

மும்பையில் இந்த ஆண்டு இன்னும் பருவ மழை தொடங்கவில்லை. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் சில நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் மும்பையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் அதிகமான கட்டடங்கள் டேங்கர் தண்ணீரை நம்பி இருக்கின்றன. மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தில் வாடகைக்கு வசிக்கும் நிகில் என்பவர், தண்ணீர் பிரச்னையைச் சுட்டிக்காட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி இருக்கிறது.

அவர் தனது பதிவில், தான் வசிக்கும் குடியிருப்பு கட்டட சொசைட்டியில் மாதம் ஒன்றுக்கு ரூ.70,000 வாடகை தொடங்குவதாகவும், தான் ரூ.90,000 வாடகை செலுத்துவதாகவும், இருப்பினும் குடியிருப்பாளர்களுக்கு சரியாகத் தண்ணீர் விநியோகம் இருப்பதில்லை என்று குறைபட்டுக்கொண்டுள்ளார்.

சொகுசு குடியிருப்பு வளாகத்தில் வசித்தாலும், போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், ஒழுங்கற்ற விநியோகத்தால் அடிக்கடி தண்ணீர் கிடைக்காமல் போவதாகவும், நிகில் குறிப்பிட்டுள்ளார்.

அடிக்கடி தண்ணீர் எதிர்பாராதவிதமாக நின்றுவிடுவதாகவும், குடியிருப்பாளர்கள் தண்ணீர் டேங்கர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ``நான் வசிக்கும் கட்டடம் 37 மாடிகளைக் கொண்ட இரண்டு டவர்கள் ஆகும். இதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்வளவு பெரிய குடியிருப்பு கட்டடத்திற்கு டேங்கர் தண்ணீர் தீர்வாகாது.

கட்டடத்தில் வசிப்பவர்கள் அதிக வாடகை கொடுத்தாலும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்கள் உட்பட சில நேரங்களில் தண்ணீர் விநியோகம் தடைபடுகிறது. சமையல் மற்றும் சுகாதாரம் போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இவ்வளவு அதிக வாடகை செலுத்துவதை கற்பனை செய்து பாருங்கள், தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்க வேண்டும்" என்று அவர் வீடியோவில் கூறினார். இப்பதிவுக்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள் அனைத்து இடங்களிலும் இதேநிலைதான் என்று தெரிவித்து வருகின்றனர். மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் பருவமழை தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு இன்னும் தொடங்காமல் இருப்பது மாநகராட்சி நிர்வாகத்தைக் கவலையடையச் செய்துள்ளது.

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க