வங்கதேச வன்முறை : `ஷேக் ஹசீனா குற்றவாளி; மரண தண்டனை விதிக்கிறோம்’ - நீதிமன்றம் ப...
``விஜய் முதல்வராக வருவதை தடுக்க SIR-ல் திமுக முறைகேடு செய்கிறது'' - தவெக நிர்மல்குமார் குற்றச்சாட்டு
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக மதுரையில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்க வந்த மாநில இணை பொதுச்செயலாளர் சி.டி நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது,
"தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து தவெக சார்பாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருக்கிறது.

இந்த தீவிர வாக்கு திருத்தப் பணியில் 69 ஆயிரம் சாவடிகளுக்கு பிஎல்ஓ நியமித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு சென்று பணியை முடித்துவிட்டு இந்த வேலையை செய்ய வேண்டும். சராசரி மனிதரால் தினசரி 10 விண்ணப்பங்கள் தான் சரிபார்க்க முடியும். தி.மு.க.வினர் ஆசிரியர்களை மிரட்டி விண்ணப்பங்களை வாங்கி வருகின்றனர்.
பிப்ரவரி மாதத்தில் வாக்காளர் பட்டியல் வரும்போது, கோடிக்கணக்கான மக்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்க வாய்ப்பு உள்ளது. இது நிறைய மக்களுக்குத் தெரியவில்லை. இதை அவசரமாகச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதைச் சரி செய்ய ஆதார் அட்டையை இணைத்துச் செய்யலாம். அதையெல்லாம் செய்யாமல் அவசர கதியில் செய்கிறார்கள்.

திமுக எதையோ மறைக்கிறார்கள், குறுக்கு வழியில் வர பார்க்கிறார்கள், தலைவர் விஜய்தான் முதல்வராக வருவார், அதை தாங்க முடியாமல் திமுகவினர் குறுக்கு வழியில் எஸ்.ஐ.ஆரை பயன்படுத்தி நிறைய இடங்களில் முறைகேடு செய்கிறார்கள். எஸ்.ஐ.ஆர்-இல் நடக்கக்கூடிய தவறுகளை கண்காணிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை ஒரு வருடத்திற்கு முன்பே கொடுத்திருக்க வேண்டும், ஒரு மாதத்தில் எப்படி முடியும்? பொதுத்தேர்வு வரவுள்ள நிலையில் எப்படி ஆசிரியர்களால் பாடம் நடத்த முடியும்.?
காங்கிரஸுடன் விஜய் கூட்டணி பேசிவருவதாக வரும் தகவல்கள் வதந்தி. இதுகுறித்து முறையாக பொதுவெளியில் அறிவிக்கப்படும். அதுபோன்று எதுவும் நடக்கவில்லை
யாரெல்லாம் தவெக குறித்து பேசுகிறார்களோ, அவர்களின் நோக்கத்தை மறந்து பேசுகிறார்கள். எங்களின் கொள்கை எதிரி யார் அரசியல் எதிரி யார் என்பதை நாங்கள் தெரிவித்துவிட்டோம். கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் கூப்பிடலாம், தேவையில்லாத வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.

ஆட்சியில் இல்லாத அதிமுக-வைப் பற்றி பேசி நாங்கள் மக்களை குழப்ப வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மக்களுக்கு முக்கிய விரோதியாக இருக்கக்கூடிய திமுகதான் அரசியல் எதிரி, கொள்கை எதிரி பாஜக, இவர்கள் இருவர் குறித்துதான் நாங்கள் பேச முடியும்.
எங்களின் கூட்டணி நிலைப்பாட்டில் ஆரம்பத்தில் எப்படி இருந்தோமோ, அப்படிதான் தற்போதும் இருக்கிறோம். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியோடும் நாங்கள் கூட்டணி வைக்க ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை. எங்கள் தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர், எங்கள் கட்சியின் தலைமையை ஏற்று யார் வருகிறார்களோ அவர்களோடு கூட்டணி வைப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.















