செய்திகள் :

விருதுநகர்: நிச்சயத்துக்கு பின் திருமணத்துக்கு மறுப்பு - இளம்பெண்ணையும், தாயையும் வெட்டிய மணமகன்

post image

விருதுநகரில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் அரிவாளால் சரமாரியாக வெட்டிய நிலையில், தடுக்க முயன்ற தாயையும் வெட்டியுள்ளார். இதில் பெண்ணின் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சி மருத்துவர் தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரின் மகள் வர்ஷா (21). இவருக்கும், முத்துக்குமாரின் அக்கா மகனான யுவராஜாவுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

வர்ஷாவின் தாயார் விநாயகஜோதி
வர்ஷாவின் தாயார் விநாயகஜோதி

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வர்ஷா யுவராஜாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், இன்று காலை வர்ஷா தனது வீட்டின் முன்பு துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, அரிவாளுடன் அங்கு வந்த யுவராஜா, திடீரென அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த வர்ஷா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அந்த நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வர்ஷாவின் தாயார் விநாயகஜோதி, மகளை காப்பாற்ற முயன்ற போது யுவராஜா அவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில், விநாயகஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வர்ஷாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வர்ஷா
வர்ஷா

இதுகுறித்து மல்லாங்கிணறு காவல் நிலைய போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து யுவராஜா, பயன்படுத்திய அரிவாளுடன் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண்ணை கொலை செய்ய முயன்றதுடன், தடுக்க வந்த அவரது தாயை வெட்டிக்கொன்ற இந்த சம்பவம் கல்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

"நான் திவ்யா பேசுறேன்.!" - ஒரு வாட்ஸ்அப் மெசேஜ்; ரூ.21 கோடி இழந்த ஆடிட்டர் - முழுப் பின்னணி!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 70 வயது மூத்த ஆடிட்டர் (CA) அசோக் விஜயவர்கியா. இவர் மத்தியப் பிரதேச வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் தலைமை தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த... மேலும் பார்க்க

லாக்கப் மரணம்: 'தலையில் ரத்தக்கட்டு, கழுத்தில் காயம்' - கடும் தாக்குதலால் கொல்லப்பட்ட சபரி வர்மன்

நாகர்கோவில் கிளைச் சிறையில் சபரிவர்மன் (34) என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர... மேலும் பார்க்க

சபரி வர்மன் லாக்கப் மரணம்: 'மனைவிக்கு அரசு வேலை வழங்க உறுதி' - கடைசிவரை போராடிய திமுக எம்.எல்.ஏ

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (34) சிறையில் அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர்... மேலும் பார்க்க

பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; சாகும்வரை ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இன்ஜினியர் சுஜி பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் நெருக்கமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் 2020-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தன்னைக் காத... மேலும் பார்க்க

நாகர்கோவில்: உடலில் 19 காயங்கள்; சிறையில் இளைஞரை அடித்துக் கொன்றது உறுதி - 3 வார்டன்கள் கைது!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (34). வீட்டுக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் சபரி வர்மன் குட்கா விற்பனை செய்ததாக கட... மேலும் பார்க்க

டிடர்ஜென்ட், பாமாயில் மூலம் செயற்கை பால் தயாரிப்பு: மகாராஷ்டிரா முழுவதும் 2.3 கோடி லிட்டர் விநியோகம்

மகாராஷ்டிராவில் பால் கலப்படத்திற்கு எதிராக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தின் பூம் தாலுகாவில் நடத்திய ரெய்டில் பெரிய அளவில் பால் கலப்படம் நடப்பது கண... மேலும் பார்க்க