செய்திகள் :

வேலூர்: சிறுமியிடம் பாலியல் சீண்டல்; பேச மறுத்ததால் மிரட்டல் - தீயணைப்பு வீரர் கைது

post image

வேலூர் மாவட்டம், லத்தேரி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார், வயது 31. இவர், வேலூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், சசிகுமாருக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுவந்திருக்கிறார் சசிகுமார். இதுபற்றி, சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்ததும், மகளை அவர்கள் கண்டித்திருக்கின்றனர். இதையடுத்து, சசிகுமாரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார் அந்த சிறுமி.

சிறுமியிடம் பாலியல் சீண்டல்

இதனால், ஆத்திரமடைந்த சசிகுமார், சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததோடு, சிறுமியின் அந்தரங்க போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து அசிங்கப்படுத்திவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.

இது குறித்து, சிறுமியின் தாய் காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில், `போக்சோ’ சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீயணைப்பு வீரர் சசிகுமாரைக் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர்.

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவ... மேலும் பார்க்க

`மகனிடம் சேரப் போகிறோம்' - பெற்றோரின் உருக்கமான கடிதம் - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு முற்ற... மேலும் பார்க்க

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க