செய்திகள் :

2026-ல் உங்கள் நிதிப் பழக்கங்கள் எப்படி இருக்க வேண்டும்? - சோம.வள்ளியப்பன் தரும் சூப்பர் டிப்ஸ்!

post image

அடுத்த சில வாரங்களில் 2025 காலண்டர் ஆண்டு முடிவுக்கு வரப் போகிறது. புதிய காலண்டர் ஆண்டு 2026-ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டில் நாம் கடைப்பிடித்து வந்த சில பழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் 2026-ஆம் ஆண்டில் நாம் வாழ்க்கை முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும்படி மாற்றிக் கொள்ள முடியும்.

உதாரணமாக, 2025-ஆம் ஆண்டில் இதுவரை நாம் எந்தச் சேமிப்பையும் செய்யாமல் இருந்திருக்கலாம். அல்லது, முதலீடு தொடர்பான எந்த யோசனையும் இல்லாமல் இருந்திருக்கலாம். இப்படி இருந்தால், வாழ்க்கை மிகவும் ஜாலியாக இருக்கும். மகிழ்ச்சி பொங்கும்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

ஆனால், திடீரென ஒரு பெரிய செலவு வந்துவிட்டால், கடன் வாங்கித்தான் செலவு செய்ய வேண்டி இருக்கும். கடன் வாங்கினால், அதிகப்படியான வட்டியை அசலுடன் சேர்த்து கட்டிமுடிக்கிற வரை நாம் படாதபாடு படவேண்டும்.

இப்படி வரும் திடீர் செலவுகளுக்கான பணத்தைச் சேர்ப்பதுதான் எமர்ஜென்ஸி ஃபண்ட் என்று பெயர். இன்றைக்கு நம்மில் பலரும் இந்த எமர்ஜென்ஸி ஃபண்ட் என்பது அறவே இல்லாமல் இருப்பதால்தான், கடன் வாங்கவேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது.

இந்த எமர்ஜென்ஸி ஃபண்டை உருவாக்குவது ஒரு முக்கியமான நிதிப் பழக்கம். இந்த மாதிரி பல வகையான நிதிப் பழக்கங்கள் உள்ளன.

இந்தப் பழக்கங்களை நம் வாழ்க்கையில் ஏன் கொண்டுவர வேண்டும், இவற்றைக் கொண்டு வருவதால், நமக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன, இந்தப் பழக்கங்கள் நம் வாழ்க்கையில் இல்லாமல் போவதால், நாம் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்கள் என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்ல ஒரு ஆன்லைன் மீட்டிங்கை ஏற்பாடு செய்திருக்கிறது ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம்.

சோம வள்ளியப்பன்
டாக்டர் சோம வள்ளியப்பன்

புதிய நிதி ஆண்டில் நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நிதிப் பழக்கங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லப் போகிறார் டாக்டர் சோம.வள்ளியப்பன்.

இவர் எழுதிய ‘அள்ள அள்ளப் பணம்’ புத்தகம் லட்சக் கணக்கான பிரதிகளை விற்பனையாகிச் சாதனை படைத்தது. இவர் எழுதிய ‘இட்லியாக இருங்கள்’ என்கிற புத்தகம் இன்று இளைஞர்களால் படித்து இன்புறும் புத்தகமாக இருக்கிறது.

பங்குச் சந்தை, சுயமேம்பாடு எனப் பல்வேறு துறைகள் சார்ந்த பல புத்தகங்களை இவர் எழுதி இருக்கிறார். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடு குறித்து பல ஊர்களில் நடக்கும் கூட்டங்களில் பேசி வருகிறார்.

நிதிப் பழக்கம்
நிதிப் பழக்கம்

டாக்டர் சோம. வள்ளியப்பன் பேசும் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் எனில், பின்வரும் இணைப்பை (https://labham.money/webinar-nov-23-2025?utm_source=nanayam_vikatan&utm_medium=magazine&utm_campaign=webinar_nov23_2025) சொடுக்கி, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்வது அவசியம்.

இந்த இணைப்பைச் சொடுக்கிப் பெயரைப் பதிவு செய்துகொள்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்பவர்களுக்கான லிங்க் அனுப்பப்படும்.

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் பலரும் டாக்டர் சோம.வள்ளியப்பனின் பேச்சைக் கேட்பதற்கு இந்தக் கூட்டத்தில் அவசியம் கலந்துகொள்ளலாமே…!

சென்னையில் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு; விடுமுறையில் தாயகம் வந்துள்ள NRI-களுக்கு நல்ல வாய்ப்பு!

வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை நிறைவேற்ற ஒருவருக்கு சம்பளம் மற்றும் தொழில் வருமானம் மட்டும் போதாது. அவர் விலைவாசி உயர்வை விட அதிகமாக வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து வருவது அ... மேலும் பார்க்க

Bank account-ல ரூ.1,20,000 உங்ககிட்ட இருந்தா... நீங்க உஷார்?! | #EmergencyFund

'Emergency Fund-ஆ அப்படின்னா என்ன'ன்னு கேட்கும் நிலைமையில்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். ஏனெனில், அது பற்றிய புரிதலும், அதன் முக்கியத்துவமும் பலருக்கும் தெரிவதில்லை. இப்படித்தான் ரமேஷின் நண்பர் சுரே... மேலும் பார்க்க

Personal Finance: முதலீட்டின் மூலம் ஒரு கோடி ரூபாய் சேர்க்கணுமா? 15:15:15 ஃபார்முலாதான் ஒரே வழி!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு கோடி ரூபாயைச் சேர்த்துவிட வேண்டும் என்பது பெரும் இலக்காக இருக்கும். ஆனால், அதை எப்படி முதலீட்டின் மூலம் சேர்ப்பது என்பது தெரியாமல் இருக்கும். சர்வதேச நிறுவனமான ஹெச்.எ... மேலும் பார்க்க

பணம் சேர்க்கும் கலை: நீங்க இந்த விஷயங்களை எல்லாம் செய்யுறீங்களா?

சம்பளம் வந்த அடுத்த சில நாள்களிலேயே வங்கிக் கணக்கு காலியாகிவிடுகிறது. ‘அடுத்த மாதம் பார்த்துக்கொள்ளலாம்’ என மனதைச் சமாதானம் செய்துகொண்டு, மாதக் கடைசியில் சிரமப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.வாடகை, கட... மேலும் பார்க்க

Inflation-ஐ தாண்டிய வருமானம் வேணுமா, இப்படி முதலீடு பண்ணுங்க | 12% வருமானத்துக்கு உத்தரவாதம்?

ஓய்வுகாலத்தில் தேவைப்படும் பணத்தை எப்படி முதலீட்டின் மூலம் சேமிப்பது, எதில் எவ்வளவு முதலீடு செய்தால் சேமிக்கலாம், ரூ.5 கோடியை ஓய்வுகாலத்தில் சேமிப்பதற்கான திட்டம் என்ன போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவி... மேலும் பார்க்க

90 நிமிடங்களில் உங்க நிதி வாழ்க்கையை மாத்திடலாம் - எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?

"மாசம் முடியுற வரைக்கும் காசு காசுன்னு அலையறேன். சேமிப்பு இல்லை, முதலீடு இல்லை. இப்படியே போயிட்டு இருந்தா எனக்கு ஓய்வுக்காலம் எப்படி இருக்கும்னே தெரியல" - இப்படி உங்களுக்குள் ஒரு குரல் தினமும் சொல்லிட... மேலும் பார்க்க