`அதிமுகவிலும் குடும்ப அரசியல்' - செங்கோட்டையன் பரபரப்பு தகவல்
AI துறைகளில் கடும் போட்டி; சீனாவில் இளம் விஞ்ஞானிகளின் அடுத்தடுத்த மரணங்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்
சீனாவில் இளம் விஞ்ஞானிகளின் மரணங்களைச் சார்ந்த புதிய புள்ளிவிவரங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
CSND என்ற ஆன்லைன் தளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 60 வயதுக்குட்பட்ட 76 ஆராய்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு முழுவதும் இந்த எண்ணிக்கை 44 ஆக இருந்தது. இந்த மரணங்கள் நோய், விபத்துகள் மற்றும் தற்கொலைகள் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்பட்டுள்ளன.
இந்த பட்டியலில், நான்ஜிங் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான டோங் சிஜியா, 33 வயதில் மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பல விஞ்ஞானிகளின் மரணத்திற்குப் பின்னால் அதிகப்படியான பணிச்சுமை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெஜியாங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லியு யோங்ஃபெங் (47), மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்தார்.
சட்டப்படி 183 நாட்கள் வேலை செய்ய வேண்டிய இடத்தில், அவர் 319 நாட்கள் பணிபுரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் அமெரிக்காவுடன் நிலவும் கடுமையான போட்டி, விஞ்ஞானிகளுக்கு பெரும் அழுத்தத்தை அளிப்பதாகவும் இதன் காரணமாக, பல முக்கிய விஞ்ஞானிகள் இளம் வயதிலேயே மரணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மரணங்கள் சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள மனித இழப்புகளை எடுத்துரைப்பதாக அந்த தரவுகள் கூறுகின்றன.




















