Rain Upadate: 'இன்று இடியுடன் கூடிய கனமழை' - எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்...
Akhanda 2 Release: "சிரமத்திற்கு மன்னிக்கவும்'' - படக்குழு கொடுத்த 'ஷாக்'; ரசிகர்கள் ஏமாற்றம்
நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் திரைப்படம் 'அகண்டா 2: தாண்டவம்'. 2021-ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனு.
சம்யுக்தா மேனன், ஆதி ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். 'அகண்டா 2: தாண்டவம்' இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் ப்ளஸ் நிறுவனம், பட வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான ட்வீட்டில், ``தவிர்க்க முடியாத காரணங்களால் அகண்டா 2 திட்டமிட்டபடி வெளியிடப்படாது என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது எங்களுக்கு ஒரு வேதனையான தருணம், மேலும் படத்திற்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு ரசிகர் மற்றும் திரைப்பட ஆர்வலருக்கும் இது ஏற்படுத்தும் ஏமாற்றத்தை நாங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்கிறோம்.
இந்த விஷயத்தை விரைவில் தீர்க்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். ஏற்பட்ட சிரமத்திற்கு எங்கள் மன்னிப்பு. உங்கள் ஆதரவு எங்களுக்கு உத்வேகமளிக்கிறது. விரைவில் ஒரு நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்வோம் என உறுதியளிக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

















