மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட...
BB Tamil 9: `இந்த டாஸ்க்கில கொடுக்கப்படும் ஸ்டார் எனக்கு வேணாம்' - திவ்யா சபரி மோதல்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருக்கின்றனர்.
இந்த 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' டாஸ்க்கில் மேனேஜர் ஆக செயல்பட்ட திவ்யா கணேஷ் மீது ஹவுஸ் மேட்ஸ் குற்றம் சாட்டிருந்தனர்.

'பொறுமை தேவை, நிதானம் தேவை', 'ரொம்ப கடுமையாக நடந்துக்குறாங்க', 'நீங்க வந்து அப்படி என்ன பண்ணிட்டீங்க', 'டீமை எப்படி வழி நடத்தணும்'னு தெரியல' என ஹவுஸ் மேட்ஸ் திவ்யாவை சாடி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' டாஸ்க்கில் கொடுக்கப்படும் ஸ்டார் எனக்கு வேண்டாம் என்று ஓட்டலில் சிலையாக நடித்த சபரி சொல்ல திவ்யா கணேஷ் உடனே வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

'நான் மட்டும் இல்ல. முடிஞ்சா எல்லோரும் சிலையா இருக்க ட்ரை பண்ணுவோம். கத்துறவுங்கலாம் ஒரு டீம்லையும், கத்தாதவுங்க எல்லோரும் ஒரு டீம்லையும் இருங்க' என சபரி சொல்கிறார். 'இந்த டீம்லயாவது ஒற்றுமையா விளையாடுறீங்களானு பார்ப்போம். முன்னாடியே வந்திருக்கனும். பிரச்னை முடிஞ்சதுக்கு அப்றோ வந்தா எப்படி?' என திவ்யா கத்துகிறார்.




















