"ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க"- இயக்குநர் ஜீத்து ஜோசப...
BB Tamil 9: "இவங்க என்ன கேம் விளையாடுறாங்கன்னு கூட்டிட்டு வந்தீங்க"- ஆதிரையுடன் மோதும் கம்ருதீன்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 63 நாள்களைக் கடந்திருக்கிறது. நேற்று(டிச.7) பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் கம்ருதீனுக்கும், அரோராவுக்கும் சண்டை நடந்தது.
`துஷார், துஷார், துஷார்'ன்னு எத்தனை டைம் சொல்லுவீங்க. நான் விளையாடுறேன், விளையாடல அது என் இஷ்டம் கம்ருதீன். உனக்கு எதாவது பிரச்னைனா என்கிட்ட மோது. துஷார் போனதை வச்சு எத்தனை நாள் என்னைக் காயப்படுத்துவீங்க" என அரோரா கோபப்பட்டு கம்ருதீனிடம் கத்தினார்.
"துஷார் வெளிய போயிட்டான், என்னைய ஞாபகம் வச்சுருப்பானான்னுகூட தெரியல அப்படின்னு நீதான் சொன்ன" என கம்ருதீன் அரோராவிடம் சொல்ல "நான் அப்படி சொன்னனா" என அரோரா கத்த இருவரும் சண்டை போட்டுக்கொண்டார்கள்.

இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில் கம்ருதீன், ஆதிரை இடையே மோதல் நடக்கிறது.
"உங்க கேம் என்னான்னு எனக்குத் தெரியும். 3-வது வாரமே எவிக்ட்டாகி போனவங்க தான் நீங்க. உங்களுக்கு ஒரு திறமையும் இல்ல" என கம்ருதீன் ஆதிரையிடம் சண்டைபோடுகிறார்.
"முதல் வாரத்துல இருந்து நான் எப்படி விளையாடினேன்னு எனக்குத் தெரியும். ஒருத்தவங்க எதை சொன்ன காயப்படுவாங்கன்னு தெரிஞ்சு பண்றதுலாம் ஒரு திறமையே கிடையாது கம்ருதீன்.

வினோத் அண்ணா அவருக்கு சப்போர்ட் பண்ணாதீங்க" என ஆதிரை கோபப்படுகிறார். இவங்க என்ன கேம் விளையாடுறாங்கன்னு உள்ள கூட்டிட்டு வந்தீங்க" என கம்ருதீன் கேமராவைப் பார்த்து கேட்கிறார்.


















