Rajinikanth: "ஆசிரியர்கள் தண்ணீர் போன்றவர்கள்" - வைஜெயந்திமாலாவுக்கு ரஜினி கௌரவம...
BB Tamil 9: "என்னை மட்டும் வம்பிழுத்துக்கிட்டே இருக்காங்க" - கம்ருதீனிடம் கண்ணீர்விடும் பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது.
இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாரல் சயின்ஸ் டீச்சர், கனி தமிழ் ஆசிரியை, அமித் டீச்சர், FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடன்ட்ஸ் ஆக நடித்து வருகிறார்கள்.
வியானா - அமித் சண்டை, சபரி - அரோரா வாக்குவாதம் என இந்த டாஸ்க்கிலும் கலவரம் வெடிக்கிறது.
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் ஹவுஸ்மேட்ஸ் ஒருவர் வார்டனாக இருக்கும் பார்வதிக்கு ஒரு லெட்டரை அனுப்பியிருந்தார்.
அதில் பார்வதியை பர்சனலாக அட்டாக் செய்திருப்பதால் அவர் கோபப்பட்டார்.

"இது ஒரு கேவலமான ஆட்டிட்யூட். ஒருத்தவங்க கேரக்டரை எப்படி ஜட்ஜ் பண்ண முடியும்.
இந்த லெட்டர் மூலமா என்னைய பர்சனல் அட்டாக் பண்ணிருக்காங்க" என பார்வதி சொல்ல அமித் இதை ஏன் சொல்லிட்டே இருக்கீங்க? என கத்தினார்.
நான் உங்களை சொல்ல-ல சார். என்னோட பாயின்ட்டை புரிஞ்சுக்க மாட்டீங்களா? என பார்வதி கோபப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து வெளியான இரண்டாவது புரொமோவில் "புரியவே இல்ல. எதுக்கு எனக்கு இந்த மாதிரி டாஸ்க்கெல்லாம் கொடுக்கணும்.

நானும் ரொம்ப சென்ஸிடிவ் தான். பேசாம இந்தவாரம் வெளியே போய்ரலாம்'னு தோணுது" என பார்வதி வினோத்திடம் சொல்லி அழுதார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், " "இது என்ன மாதிரியான திருட்டுன்னு எனக்குத் தெரியல. என்னோட சேலைய எடுத்து வச்சுருக்காங்க.

எந்த விஷயத்துல பர்சனலா ஹர்ட் ஆவோமோ, அதைப் பண்றாங்க. என்னை மட்டும் வம்பிழுத்துக்கிட்டே இருக்காங்க" என பார்வதி கம்ருதீனிடம் சொல்லி அழுகிறார்.






















