``ஒரு தவறும் செய்யவில்லை; அடி மேல் அடி, நொறுங்கிப் போனேன்" - மத தாக்குதல் பற்றி ...
BB Tamil 9: "ஒருவருடன் பழகிவிட்டால், அந்த உறவை முறிப்பது ரொம்ப கஷ்டம்" - மனம் திறக்கும் துஷார்!
பிக்பாஸ் வீட்டில் இருந்து டபுள் எலிமினேஷனில் எலிமினேட்டானர் துஷார். 34 நாள்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தவர், அரோராவுடன் சேர்ந்து அவர் ஆட்டத்தை ஆடாமல் விட்டுவிட்டதால்தான் இந்த எலிமினேஷன் நடந்ததாக சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.
இந்நிலையில் 'டெலி விகடன்' சேனலுக்கு நேர்காணல் அளித்திருக்கும் துஷாருடன் பிக்பாஸ் அனுபவம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் குறிப்பாக, 'அரோரா' பற்றிய கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்திருக்கிறார், பிக்பாஸ் துஷார்.

அரோராவுடன் சேர்ந்ததுதான் உங்கள் எலிமினேஷனுக்குக் காரணமா?
துஷார்: இல்லை. அப்படியெல்லாம் நான் நினைக்கல. நிறையபேர் நிறைய விதமாகப் பேசுறாங்க. நாங்க ரொம்ப நேர்மையாக நட்பாகப் பழகினோம். பிக்பாஸ் வீட்டில் மனம்விட்டுப் பேச எனக்குக் கிடைத்த நல்ல நட்புதான் அரோரா. அதைத் தாண்டி எங்களுக்கிடையில் ஏதுமில்லை. அவரால் நான் எவிக்ஷானாகவில்லை.
வெளியில் நம்மள வேறமாதிரி பார்ப்பாங்கனு நாங்க இரண்டுபேரும் கொஞ்ச நாளில் தனித்தனியாக விளையாட ஆரம்பித்துவிட்டோம். விஜய் சேதுபதி சார்கூட நிறைய ஹிண்ட் கொடுத்தார். ஆனால், ஒருவருடன் பழகிவிட்டால், அந்த உறவை முறிப்பது ரொம்ப கஷ்டம்.
நான் எவிக்ஷனாகி வெளியில் வந்ததும் எங்கவீட்டுல அரோரா பற்றி பேசவேயில்லை. 'நீ ஏன் உன்னோட திறமைய காட்டல'னுதான் எங்க வீட்டுல சொன்னாங்க. எனக்கு நல்ல டான்ஸ் ஆட தெரியும். ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனதும் அதெல்லாம் எனக்கு ஞாபகமேயில்லை. என்னோட திறமைய காட்டமால் விட்டதுதான் நான் எவிக்ட்டாக காரணம்" என்று பேசியிருக்கிறார் துஷார்.
வீடியோவைக் காண:
Prankல தான் எல்லாருடைய உண்மை முகம் தெரிஞ்சது..! - Biggboss Praveen Raj Dev Shares | Serial | Cinema




















