செய்திகள் :

BB TAMIL 9: DAY 47: சாண்ட்ராவின் வில்லங்க சமிக்ஞை; செக்மேட் வைத்த பிக் பாஸ்; கவின் செய்த PRANK!

post image

“வெளில இருந்து பார்க்கறத விடவும் கொடூரமா இருக்கா” - வந்த முதல் நாளில் பாரு குறித்து சாண்ட்ரா சொன்னது இது. ஆனால் இப்போது பார்த்தால் பாருவை விடவும் சாண்ட்ரா  கொடூரமாக தென்படுகிறார். பாருவுக்கு நல்ல பெயர் வாங்கித் தந்து விடுவார் போலிருக்கிறது. அத்தனை வன்மம். 

விக்ரமை பிரஜின் வெளிப்படையாக மிரட்டியது உள்ளிட்ட பல விஷயங்களை விஜய்சேதுபதி இந்த வாரம் கறாராக விசாரிக்க வேண்டும். செய்வாரா?


“நான் யாரு.. எங்க இருக்கேன்.. ஒண்ணும் புரியலையே” என்று விக்ரமிடம் அனத்திக் கொண்டிருந்தார் அமித். “நான் இந்த ஆட்டத்திற்கு பொருத்தமானவன் இல்லன்னு தோணுது. என்ன பண்றேன். நான் செய்யறது தெரியுதா.. ஒண்ணும் வௌங்கலை” என்றெல்லாம் புலம்பிய அமித்திடம் “நீங்க உங்க ஸ்டைல்ல ஆடுங்க ப்ரோ” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரம். 

வீக்லி டாஸ்க்கில் மோசமாக பங்கேற்ற இருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். பல சமயங்களில் நியாயமாக நடந்து கொண்டாலும் வியானாவிற்குள்ளும் ஒரு சிறிய விஷ பாட்டில் இருக்கிறது. தன்னை அழ வைத்த விக்ரமை அவர் தேர்வு செய்ய, சொல்லி முடிக்கும் வரை காத்திருந்த பிக் பாஸ் ‘விக்ரம் பெயரை சொல்ல முடியாது. அவர் தல போட்டியில் இருக்கிறார்’ என்று நிராகரித்தார். எனவே சாண்ட்ராவின் பெயரை வியானா சொன்னது சிறப்பான தோ்வு. 

BB TAMIL 9: DAY 47

பிறகு வந்த பலருமே சாண்ட்ரா மற்றும் திவ்யாவின் பெயரை சொன்னார்கள். பாருவை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. மாப் மாயாவிஸ் சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டு அந்த அணியில் உள்ள அனைவருமே தல போட்டியில் இருப்பதால் அவர்களின் பெயரைச் சொல்ல முடியாது. இல்லையென்றால் சாம்பார் அணியில் இருந்தவர்கள் விக்ரமை டார்கெட் செய்திருப்பார்கள். பிரஜின் கூட சாண்ட்ராவின் பெயரைச் சொல்லி நியாயவான் போல காட்டிக் கொண்டார். 

இறுதியில் 'worst performer'-களாக சாண்ட்ராவும் திவ்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் சிறைக்கு செல்லும் தண்டனையோடு கூடுதலாக ஒன்றையும் தந்தார் பிக் பாஸ். ‘அடுத்த சீசன்ல கண்ணை மூடிக்கங்க’ என்று பிக் பாஸிற்கே அட்வைஸ் செய்த சாண்ட்ராவிற்கு செக்மேட். 

இதைத் தவிர திவ்யாவும் ஏதோ வாயை விட்டிருப்பார் போலிருக்கிறது. “இவர்களின் ஆசைக்கு இணங்க சிறைத்தண்டனை. என் ஆசைக்கு இணங்க இந்த நாள் முழுவதும் அனைத்து வேலைகளையும் இந்த இருவர் மட்டுமே செய்ய வேண்டும். இதை விக்ரம் வழிநடத்தி மேற்பார்வையிட வேண்டும்’ என்று சொன்னது சுவாரசியமான டிவிஸ்ட். ஒருவகையில் poetic justice. 

மேற்பார்வை என்னும் சொல்லும் போதே ‘விக்ரம்’ என்று திவ்யா முனக, “ஹௌ பிரில்லியண்ட் திவ்யா?” என்று சர்காஸமாக பாராட்டினார் பிக் பாஸ். “நான் நல்லா செய்வேன்” என்று திவ்யா சொன்னதும் “என்னையா?” என்று கேட்டது நல்ல நகைச்சுவை. 

கார்டன் ஏரியாவில் விக்ரம் அழுது கொண்டிருந்தார். ஆனந்தக் கண்ணீர். “எவ்ளோலாம் பேசினாங்க தெரியுமா.. என்ன நடக்குதுன்னே தெரியல. இதெல்லாம் வெளியல எப்படி தெரியும்ன்னு புரியல. ஒரு மாதிரி பயம் வரும்தானே.. ஆனா ‘நான் இருக்கண்டா.. எல்லாத்தையும் நான் பார்த்துட்டுதான் இருக்கேன்’ன்னு சொல்ற மாதிரி பிக் பாஸ் சப்போர்ட் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று ஃபீலிங்க்ஸ் ஆன விக்ரமை சுபிக்ஷாவும் எஃப்ஜேவும் தேற்றினார்கள். 

கண்ணீரை துடைத்துக் கொண்டு ‘எங்கே அந்த ரெண்டு பேரு?’ என்று ஜாலியாக கிளம்பினார் விக்ரம். தண்டனை என்னமோ சாண்ட்ரா மற்றும் திவ்யாவிற்கு என்றாலும் உண்மையில் விக்ரமிற்குத்தான் தண்டனை கிடைத்தது எனலாம். சண்டி மாடுகளை வைத்துக் கொண்டு வேலை வாங்குவது மிகவும் கடினம். 

ஆரம்பத்திலேயே சாண்ட்ராவைக் காணவில்லை. கிராஸ் ஆன திவ்யாவிடம் “குளிச்சுட்டு வேலையை ஆரம்பிப்பீங்களா?” என்று விக்ரம் கேட்க “குளிச்சுட்டும் வருவேன். குளிக்காமயும் வருவேன். என் இஷ்டம்’ என்கிற மாதிரி அலட்டினார். ‘ரைட்டு.. இன்னிக்கும் சோத்துக்கு அலைய விடுவாங்க போல’ என்று மனதிற்குள் அலறிய விக்ரம் “இந்தப் பப்பாளியையாவது பங்கு போட்டுக் கொடுங்க.. மக்களுக்கு பசிக்கும்” என்று சொல்ல அதையும் ஸ்லோமோஷனில் எதிர்கொண்டார் திவ்யா. 

திவ்யா செய்யும் அலப்பறையை வெளியில் வந்து சொன்ன விக்ரம் “நான் இங்க யாரையும் ஹர்ட் பண்ண வரலை. என் திறமையைக் காட்டத்தான் வந்தேன்” என்று பிரஜினிடம் உருக்கமாகச் சொன்னார். “கரெக்ட்டுதான். நீங்க உங்க வேலையைத்தான் பண்றீங்க. பி்க் பாஸிற்கு பதில் சொல்லணும்ல” என்று அப்போது நியாயமாகத்தான் பேசினார் பிரஜின். 

ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை. “விக்ரமிற்கு நான் வார்னிங் தரேன். சாண்ட்ராவும் நானும் தம்பதிகள். ஆனா தனித்தனியாகத்தான் ஆடறோம். ஆனா இவரு என்னை நோண்டிட்டே இருக்காரு. வேணுமின்னா பிக் பாஸ் கிட்ட சொல்லி 2 நிமிஷம் கதவை திறக்கச் சொல்றேன். போய் உங்க வொய்ஃபையும் கூட்டிட்டு வாங்க” என்று அதிகாரமான குரலில் பிரஜின் சொன்னது முழுக்க அபத்தம். அநியாயமும் கூட. 

சாண்ட்ராவும் பிரஜினும் டாஸ்க் சமயத்தில் கூட தம்பதிகளாக செயல்படுவது ஊர் அறிந்த ரகசியம். இதை விக்ரம் மட்டும் சொல்லவில்லை. நாமினேஷன் சமயத்தில் பலரும் சொன்னார்கள். கனியும் அழுத்தமாகச் சொன்னார். பெஸ்ட் ஃபர்பார்மராக, ஒன்றுமே செய்யாத கணவரை தேர்ந்தெடுத்தார் சாண்ட்ரா. தனது கணவர் இருக்கும் அணிக்கு பாயிண்ட்டுகளை அள்ளித் தந்தார். இப்படி அவர்கள் தம்பதியராக ஆடுவதற்கு பல நிரூபணங்கள் இருக்கின்றன. 

‘பிக் பாஸ் கிட்ட சொல்லி கதவை திறக்கச் சொல்றேன். சேது கிட்ட பேசறேன்’ என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு பிரஜின் அதிகாரம் படைத்தவரா? ‘என் கிட்ட வெச்சிக்கிட்டா காலி பண்ணிடுவேன்’ என்றெல்லாம் பிரஜின் மிரட்டியது கண்டிக்கப்பட வேண்டியது.

“நாங்க கப்புள்ளா எந்த கேம்ல ஆடினோம்?” என்று சாண்ட்ரா விசாரிக்க “எல்லாம்தான்” என்றார் விக்ரம். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் இவரிடம் விவாதிக்க முடியாது என்றோ, என்னமோ “எனக்கு வாய் சரியில்ல” என்று விக்ரம் சொல்ல “வாய் மட்டுமா சரியில்ல’ என்று சாண்ட்ரா ஆடிக் காட்டியது விரசம். “எனக்கு பயமா இருந்தது. அப்படியே பயந்துட்டேன்” என்று வந்த புதிதில் பாவனை செய்த சாண்டரா, உண்மையில் சைலண்ட்டாக வயலன்ட் செய்யும் நபர் மாதிரி இருக்கிறார். 

ஒருவழியாக சமையல் செய்ய இறங்கிய சாண்ட்ராவை நோக்கி “சிங்கம் களம் இறங்கிடுச்சு” என்று பாராட்டினார் பாரு. (ஒரு காலத்தில் புகழ்பெற்ற ரவுடியாக இருந்தவன், அவனை விடவும் பெரிய ரவுடி வந்தவுடன் பம்மி ஒட்டிக் கொள்வது போல மாறி விட்டார் பாரு)

பாடல் சத்தம் கேட்டது. உள்ளே வந்தவர் கவின். ‘மாஸ்க்’ திரைப்படத்திற்கான பிரமோஷன். அனைவரும் நலம் விசாரித்து கை கொடுக்க “விக்ரம்.. இவர்ட்ட பேசலாமா?” என்பது மாதிரி அனுமதி கேட்டார் திவ்யா. அதாவது விக்ரமின் மேற்பார்வையில் எல்லாவற்றையும் அனுமதி கேட்டுத்தான் செய்கிறாராம். கவினுக்கு அது உடனே புரிந்திருக்க வேண்டும். பூர்ணிமா மாதிரி அப்பாவியாக சீன் போடவில்லை. அவரும் முன்னாள் போட்டியாளர்தானே? கிச்சன் ஏரியா டேஞ்சர் என்று தெரியாதா? எனவே “தப்பான நேரத்துல உள்ளே வந்துட்டனா?” என்று சிரித்தார். 


படத்தின் டிரைய்லர் முடிந்ததும் “இந்தப் படத்துல வர்ற யாரும் நல்லவங்க கிடையாது. கெட்டவங்கள்லேயே நல்லவன் யாருன்னுதான் தேடணும்” என்று கவின் சொன்ன விளக்கம், பிக் பாஸ் சீசனுக்கும் பொருந்தும். 

“ஓகே.. நான் கௌம்பறேன். ஆனா அதுக்கு முன்னாடி இதைப் பண்ணித்தான் ஆகணும். தல உத்தரவு. ஒரு கவர் வெச்சிட்டு போறேன். நான் போனப்புறம் பாருங்க” என்று எவிக்ஷன் கவரை வைத்து விட்டுச் சென்றார் கவின். அவரை வழியனுப்பி வைத்து விட்டு மக்கள் ஆவலாக வந்து பார்க்க, நாம் யூகித்தபடியே ‘Prank’ என்று இருந்தது. “P -ன்ற லெட்டரை பார்த்தவுடனே நான்தான்னு பயந்துட்டேன்” என்று திகைப்பு மகிழ்ச்சியான டோனில் கூவினார் பாரு. (நாங்களும்தான் எதிர்பார்க்கறோம்!)

“என் ஹார்ட்டே வெளியே வந்துடுச்சு.. என்னதிது பிக் பாஸ்?” என்று பாரு சிணுங்க “நீங்க பண்றதெல்லாம் பார்த்தா எனக்கு கூடத்தான் வெளிய வருது. நான் சொல்லிக்கிட்டா இருக்கேன்” என்று ஊமைக்குத்தாக குத்தினார் பிக் பாஸ். 

“திவ்யா.. யூனிபார்ம்” என்று பிக் பாஸ் நினைவுப்படுத்த “விக்ரம் போடச் சொல்லலை’ என்று அழும்பு செய்தார் திவ்யா. அடுத்து ‘மைக் பாட்டரியை மாத்துங்க’ என்று சொல்ல “யாராவது மாத்துங்களேம்பா.. எனக்கு ரெண்டு கைதான் இருக்கு” என்று எரிச்சலானார் திவ்யா. அந்த டென்ஷனிலேயே நெய் ஸ்பூனை மற்றவர்களின் தட்டில் லொட்டென்று போட, வியானா அதற்கு புண்பட்டு கண்கலங்க அதுவும் ஒரு பஞ்சாயத்தாக போனது. “ஸ்பூனை சிங்க்லதானே தூக்கிப் போட்டேன். இவங்க மண்டைலயா போட்டேன்” என்று எரிச்சலானார் திவ்யா. சாண்டராவுடன் பழகிப் பழகி இவரும் ஒரு மினி சாண்ட்ராவாக மாறி வருகிறார் போல. 

சாண்ட்ராவும் திவ்யாவும் வேலை செய்யாமல் டபாய்ப்பதால் ‘சூப்பர்வைசரான’ விக்ரம் அருகிலேயே அமர்ந்து பாடிக் கொண்டிருக்க ‘தள்ளிப் போய் பாடுங்க.. தலை வலிக்குது’ என்று எரிச்சலானார் திவ்யா. அதற்கு பின்பாட்டு பாடினார் பாரு. 

வீக்கெண்ட் பஞ்சாயத்தில் ரகளை செய்வாரா விசே?

வென்ற அணிக்கு ஐஸ்கிரீம் பரிசாக வந்தது. அதை நேரில் சென்று வாங்க வெட்கப்பட்டு “பிரஜின் அண்ணா.. உங்க பங்கை வாங்கித் தாங்க” என்று கேட்டு சாப்பிட்டார் திவ்யா “நீயும் சாப்பிடு. நான் ஜெயிச்சு வாங்கினது” என்று பெருமிதமாக சாண்ட்ராவிடம் பிரஜின் சொல்ல “நீ மட்டும்தான் வாங்கினது இல்ல. கப்புள்ளா ஆடி வாங்கினது” என்று சர்காஸம் செய்தார் சாண்ட்ரா. 

“யாருக்கெல்லாம் பர்கர் வேணும்?” என்று பாசமுள்ள அப்பா மாதிரி கேட்டார் பிக் பாஸ். அது வேண்டுமென்றால் அவர் மனது குளிரும்படி செய்ய வேண்டுமாம். அனைவரும் ‘ப்ளீஸ்.. சார். ப்ளீஸ் சார்’  என்று பாய்ஸ் படத்தின் பாடலை கோரஸாக பாடினார்கள். (இந்த SIR என்பது வெளியில் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. படிவத்தை நிரப்புவதற்குள் முந்தைய ஜென்மத்து தலையெழுத்தையெல்லாம் மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது!)

“எங்களை எல்லாம் மறந்துட்டாங்க. நாங்க வர மாட்டோம்” என்று கார்டன் ஏரியாவில் பிடிவாதம் பிடித்தனர், சாண்ட்ராவும் திவ்யாவும். “அவங்க வரலைன்னா.. நானும் வர மாட்டேன். சாப்பிட மாட்டேன்” என்று மிகையான பாசத்தைக் கொட்டினார் பாரு. (பார்றா! கூட்டணியை!)..

பிக் பாஸ் கூப்பிட்டவுடன் இவர்கள் உள்ளே வந்தவுடன் அனைவருக்கும் பர்கர் வழங்கப்பட சாப்பிட்டு்க் கொண்டிருந்தார். “விக்ரம்.. திவ்யாவும் சாண்ட்ராவும் எல்லா வேலையும் செஞ்சு முடிச்ச பின்னாடி.. தல கிட்ட சொல்லி ஜெயில்ல போடுங்க” என்றார் பிக் பாஸ். “ஓகே. பாஸ். ஆனா.. இவங்க ரொம்ப நல்லா வேலை செய்யறாங்க” என்று நொந்தபடி சொன்னார் விக்ரம். 

பிறகு கிச்சனுக்கு சென்ற விக்ரம் “நல்ல வேளை சோத்துக்கு அலைய வெச்சிடுவாங்கன்னு நெனச்சேன். அது நல்ல படியா போச்சு. இன்னிக்கு இவங்களை வேலை செய்ய வைக்காம தூங்கப் போறதில்லை” என்று சபதம் ஏற்றார் விக்ரம். (விக்கி.. அவங்க உங்க கிட்ட மாட்டலை. நீங்கதான் அவங்க கிட்ட மாட்டிக்கிட்டிருக்கீங்க..!) 

இந்த வாரம் விசாரிப்பதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. சாம்பார் அணியின் அலப்பறைகள், சாண்ட்ராவின் வன்மங்கள், பிரஜினின் மிரட்டல் போன்று பல அயிட்டங்கள். விசே இவற்றையெல்லாம் முறையாக விசாரிப்பாரா என்று பொறுத்திருத்து பார்ப்போம்.!

BB Tamil 9: "நான் உனக்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன் விக்ரம்" - எச்சரிக்கும் பிரஜின்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் ... மேலும் பார்க்க

BB TAMIL 9: DAY 46: சாம்பார் அணியில் சாண்ட்ரா, பாருவின் அலப்பறைகள் - சகிக்க முடியாமல் வெளியேறிய கனி!

‘FUN TASKக்கா பண்ணுங்க’ என்று பிக் பாஸ் தலையால் அடித்துக் கொண்டாலும் ‘சோறு - சோப்பு - மாப்பு டாஸ்க்கில் நமக்கு கிடைத்தது என்னமோ ஆப்புதான். எண்டர்டெயின்மென்ட்க்கு பதிலாக வன்மம்தான் தெரிந்தது. அதிலும் ப... மேலும் பார்க்க

BB Tamil 9: "எங்க டீம் வொர்ஸ்ட்'னு பேர் வாங்குனதுக்கு அவுங்க தான் காரணம்" - சாண்ட்ராவை சாடிய கனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவா... மேலும் பார்க்க

BB Tamil 9: "அவுங்க ரொம்ப வொர்ஸ்ட்டா இருக்காங்க"- சாண்ட்ராவை சாடிய ஹவுஸ் மேட்ஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவா... மேலும் பார்க்க

BB Tamil 9: "என்னோட கேம் கேவலமான கேம்; இனி நான் இந்த டீம்ல இல்ல" - காட்டமான கனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவா... மேலும் பார்க்க