செய்திகள் :

Bhoot Bangla - அக்‌ஷய்குமாரின் கிழிந்த ஆடை; டிரெய்லர் விழா ட்ரெண்ட் ஆனது எப்படி?

post image

மும்பையில் நடைபெற்ற `Bhoot Bangla' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னணி நட்சத்திரங்களான அக்‌ஷய்குமார், தபு, வாமிகா கபி, ராஜ்பால் யாதவ் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், விழாவின் நாயகனாக இருக்க வேண்டிய டிரெய்லரை விட, அக்‌ஷய்குமாரின் ஆடைதான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அக்‌ஷய்குமார்
அக்‌ஷய்குமார்

கிழிந்து தொங்கும் நீல நிற சட்டை, அதன் மேல் அதே போன்று கிழிந்த நிலையில் ஒரு பிளேஸர் ஜாக்கெட் ஆகியவற்றை அக்‌ஷய் அணிந்திருந்தார். இதில் கூடுதல் விசித்திரம் என்னவென்றால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வண்ணமயமான டை-களை அணிந்திருந்ததுதான். ஒன்று சிவப்பு நிறம், மற்றொன்று மஞ்சள் நிறம்.

கிழிந்த ஆடை பாணி, ஃபேஷன் உலகில் Distressed Fashion அல்லது Deconstructed Look என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்டைல் Grunge கலாசாரத்திலிருந்து உருவானது. ஆடைகள் பழையதாகவும், கிழிந்தும், தேய்ந்து போனது போன்ற தோற்றத்தையும் தருவதே இதன் நோக்கம். சமீபகாலமாக சில ஆடம்பர பிராண்டுகள் கிழிந்த சட்டைகளையும், அழுக்கான ஷூக்களையும் பல லட்சங்களுக்கு விற்று இந்த ட்ரெண்டை மீண்டும் முன்னெடுத்து வருகின்றன.

அக்‌ஷய்குமார்
அக்‌ஷய்குமார்

அக்‌ஷய் குமார் பொதுவாகவே தனது உடற்பயிற்சி மற்றும் ஸ்டைலில் அதிக கவனம் செலுத்துபவர். ஆனால், இந்த முறை அவர் வழக்கத்திற்கு மாறான, பரிசோதனை முயற்சியிலான ஃபேஷனை கையில் எடுத்துள்ளார். பேய்ப் படத்திற்கான ப்ரோமோஷன் என்பதால், சிதைந்து போன ஒரு பங்களாவைப் போல, சிதைந்த கிழிந்த ஆடைகளை அணிந்து படத்தின் கதைக்களத்தோடு ஒரு தொடர்பை ஏற்படுத்த அவர் முயன்றிருக்கிறார் போல...

இந்த ட்ரெண்ட் பொதுவாக மேலை நாடுகளில் `Runway' எனப்படும் பேஷன் ஷோக்களில் மட்டுமே அதிகம் காணப்படும். இதை ஒரு பொது விழாவிற்கு அக்‌ஷய் அணிந்து வந்ததுதான் ரசிகர்களுக்கு நெருடலாக இருந்தது என்று கமெண்ட் செய்துள்ளார்கள்.

மொத்தத்தில், `பூத் பங்களா' டிரெய்லரை விட அக்‌ஷய்குமாரின் கிழிந்த ஆடைதான் பாலிவுட்டில் வைரல்!

மனைவி குறித்து பேசிய ரித்தேஷ் தேஷ்முக்; தேம்பி அழுத ஜெனிலியா - வைரலாகும் வீடியோ!

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 'ராஜா சிவாஜி'. ரித்தேஷ் தேஷ்முக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 'ராஜா சிவாஜி' படத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Hansika: 'காஸ்டிங் கௌச்' குறித்த கேள்விக்கு நடிகை ஹன்சிகாவின் பதில் - விவாதிக்கும் நெட்டிசன்கள்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த செய்தியைத் தொடர்ந்து மீண்டும் தலைப்புச் செய்திக... மேலும் பார்க்க

"சினிமா வேண்டாம் என்று ரூ.4500 சம்பளத்தில் வேலை செய்கிறார்" - மகன் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் நடிகை டிவிங்கிள் கண்ணா தம்பதியின் மகன் ஆரவ் தனது 15 வயதில் லண்டன் சென்று பேஷன் டிசைனிங் கற்றுக்கொண்டு வந்தார். லண்டனில் படிக்கச் சென்றபோது தனக்கு தேவையான சாப்பாட... மேலும் பார்க்க

சுகேஷின் ரூ.200 கோடி மோசடி வழக்கு; அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விருப்பம்

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் சிங் சிறையில் இருந்தபோது அவரை வெளியில் கொண்டு வருவதாக தொழிலதிபர் மனைவியிடம் கூறி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திர சேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிற... மேலும் பார்க்க

'சிராக் பஸ்வானுடன் காதல்?' - கங்கனா ரனாவத்தின் விளக்கம் என்ன?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்றம் சென்றுவிட்டார். ஆனால் சிறிது நாட்களில் தனக்கு அரசியல் பிடிக்கவில்லை என்று பேட்டியளிக்க ஆரம்பித்தார். இப்போது நாடா... மேலும் பார்க்க

"அப்போது என் தந்தை மதுவுக்கு அடிமைப்பட்டிருந்தார்; அவரின் மறைவுதான் எங்களை சேர்த்தது" - பாபி தியோல்

மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மகனும், பாலிவுட் நடிகருமான பாபி தியோல், சமீபத்தில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தந்தை தர்மேந்திராவின் மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறா... மேலும் பார்க்க