செய்திகள் :

Condom: `வடக்கில் வெற்றிலை, தெற்கில் மல்லி ஃப்ளேவர்'- இந்தியாவில் ஆணுறை விற்பனை குறித்து Manforce MD

post image

நாட்டின் மிகப்பெரிய மருத்துவ நிறுவனமான மேன்கைண்ட் பார்மா (Mankind Pharma)-வின் கிளை நிறுவனம் மேன் ஃபோர்ஸ் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

பாலியல் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு வெட்கப்படும் இந்தியாவில், சிறப்பாக ஆணுறை விற்பனை செய்துவரும் வெற்றிகரமான நிறுவனமாக கருதிக்கொள்ளும் மேன்கைண்ட் பார்மாவின் இணை நிறுவனர் ராஜீவ் ஜுனேஜா, ஆணுறைகளில் அதிகம் விற்பனையாகும் ஃப்ளேவர் குறித்துப் பேசியுள்ளார்.

தெற்கில் இருப்பவர்களுக்கு Flower Flavor Condom பிடிக்கும்!

இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வசிக்கும் நபர்கள், ஒவ்வொரு விதமான ஃப்ளேவரை விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர் ஆணுறைகள் அதிகமாக விற்பனையாவதாகவும், உலகம் முழுவதும் இருப்பதுபோல ஃப்ளேவர் இல்லாத ஆணுறைகள் மிகக் குறைவாக விற்பனையாவதாகவும் தெரிவித்துள்ளார்.

condom

ஃப்ளேவர் உள்ள ஆணுறைகளில் பான் (வெற்றிலையில் இருந்து உருவாக்கப்படும்) ஃப்ளேவர் மிகக் குறைவாக விற்பனையாவதாகவும் கூறியுள்ளார்.

பான் ஃப்ளேவர் சில பகுதிகளில் மட்டும் அதிகம் விற்பனையாவதாக கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய பிரதேசங்களில் வெற்றிலை அதிகம் விற்பனையாவதாகவும், தென்னிந்திய பிரதேசங்களில் மல்லிகை ஃப்ளேவர் அதிகம் விற்பனையாவதாகவும் கூறியுள்ளார். தென்னிந்தியர்களுக்கு பூக்கள் பிடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் நவராத்ரியின் போது குஜராத்தில் அதிகமாக ஆணுறை விற்றதாகவும் கூறியுள்ளார். நவராத்ரி பண்டிகையின்போது கர்பா நடன விழா இருப்பதால் விற்பனை அதிகரித்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் - இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்.சி.எல்!

நாட்டின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக கருதப்படும் ஹெச்.சி.எல் நிறுவனத்தை தமிழகத்தை சேர்ந்த சிவ்நாடார் தொடங்கி நடத்தி நடத்தி வருகிறார். அவர் தனது நிறுவனத்தை உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் அ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; காட்டன் சேலை உற்பத்தி பாதிப்பு; பின்னணி என்ன?

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில் காட்டன் சேலை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. விசைத்தறித் தொழிலை நம்பி இங்கு 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரி... மேலும் பார்க்க

BSNL: 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.262 கோடி லாபம்! - எப்படி சாத்தியமானது?

BSNL நிறுவனம் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.262 கோடி நிகர லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளத்து. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு லாபத்துக்கு திரும்பி இருக்கிறது BSNL.அரசு நிறுவனமான BSNL அதன் விரி... மேலும் பார்க்க

`தொழிலாளர்கள் வேலைக்காக இடம்பெயர கூட மறுக்கின்றனர்..!' - L&T தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சொல்வதென்ன?

எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, `கட்டுமானத் தொழிலுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை' என்று குறைபட்டுக்கொண்டார். இது தொடர... மேலும் பார்க்க

`இதுக்காக டுக்காட்டி காரை வித்துட்டேன்' - ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கிய கோவை ஸ்டார்ட் அப்!

கோவையை தலைமையிடமாகக் கொண்ட கோவை.கோ என்ற ஏ.ஐ ஸ்டார்ட் அப் ஒன்று தங்களின் நிறுவன ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கியிருக்கிறது.இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் ... மேலும் பார்க்க