செய்திகள் :

Diwali Exclusive: ``தீபாவளிக்கு முதல்நாள் சட்டைய தொலைச்சிட்டு..!" - ஜெயக்குமார் கலகல ஷேரிங்ஸ்

post image

பண்டிகை கொண்டாட்டம் என்றாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம், நினைவுகள் என ஏதோ ஒன்றுடன் தொடர்பிருக்கும். அந்த மன உணர்வுகளின் பிம்பமாக சிலருக்கு மகிழ்ச்சி, குதூகலம், துன்பம், கவலை என அந்த நிகழ்வுக்கு ஏற்ற மனநிலையும் ஒட்டிக்கொள்ளும். இந்த மனநிலைக்கு அரசியல் தலைவர்களும் விதிவிலக்கல்ல. அதனால், தீபாவளி அனுபவங்கள் குறித்து பேசலாம் என முடிவு செய்து, வெளிப்படையாகவே தீவிர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சர், ராயபுரம் தொகுதி மக்களுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயக்குமாரை தொடந்து கொண்டு தீபாவளி அனுபவங்கள் குறித்து அவரிடம் பேசினோம். அவருடனான பேட்டி...

ஜெயக்குமார்

``இப்போது அம்மையார் ஜெயலலிதா உயிரோடு இல்லை என்றாலும், அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் எங்கள் நம்பிக்கை. தீபாவளி அன்று ஜெயலலிதா அம்மையார் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். அவருடைய பணியாளர்களுக்கு அன்பளிப்பு வழங்கி அவர்களை மகிழ்விப்பார். வெளியில் பார்க்க இரும்புப் பெண்ணாக இருந்தாலும், அவருடைய மனதில் எப்போதும் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும். தீபாவளி அன்று, வீட்டுக்கு வெளியில் நாற்காலிபோட்டு அமர்ந்து, பட்டாசு வெடிப்பதை பார்த்து குதூகலிப்பார். அப்போது அந்த குழந்தை ஜெயலலிதாவை பார்க்க முடியும். அதுதான் நினைவுக்கு வருகிறது.”

``அம்மாவுடன் தீபாவளி கொண்டாடியதில்லை... தீபாவளி அன்று அவரை சந்திப்பது அவரை தொந்தரவு செய்வதாக தோன்றும். அதனால், தீபாவளிக்கு மறுநாள் அவரை வேதா இல்லம் சென்று சந்திப்போம். அப்போதுதான் அவருக்கு தீபாவளி வாழ்த்தும் சொல்வோம். எங்களை மகிழ்வுடன் வரவேற்று, வீட்டில் செய்த பலகாரங்களை கொடுப்பார். அதெல்லாம் மறக்க முடியாத தீபாவளி.”

ஜெயக்குமார்

``அரசியல், கட்சி சார்ந்து நிறைய தீபாவளி கொண்டாட்டம் என் நினைவில் இருந்தாலும், இன்றுவரை என்னால் மறக்க முடியாத தீபாவளி ஒன்று உண்டு. அது என் பால்யகால நினைவு. பொதுவாகவே தீபாவளி என்றால், என் அம்மாவின் கையால் செய்யும் அறுசுவை பலகாரம், அப்பா ஆசையுடன் வங்கி தரும் உடை என அந்த நினைவுகள் என்றும் என்னை மகிழ்விக்கும். அது போன்ற ஒரு தீபாவளியில்தான் நான் மிகுந்த சோகமான ஒரு நிகழ்வும் நடந்தது. அந்த காலத்தில் ரெடிமேட் ஆடைகள் கிடைக்காது. அதனால், துணி வாங்கி அதை டெய்லரிடம் கொடுத்துதான் தைக்க வேண்டும்.

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் டெய்லரும் பிஸியாக இருப்பார். எனவே, தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே தீபாவளிக்காக அப்பா வாங்கி கொடுத்த துணியை டெய்லரிடம் கொடுத்து, சட்டை பாக்கெட், பேன்ட் பாக்கெட், பெல்ட் போடும் இடம், பின் பாக்கெட், இந்த டிசைனல இப்படி இருக்கனும் என அளவெல்லாம் கொடுத்து தைக்க கொடுத்தேன். அந்த டிரஸ்ஸ போட்டுக்கிட்டு பசங்க கூட படத்துக்கு போகனும், வெளிய ஊர் சுத்த போகணும் என, தைக்காத அந்த சட்டையை அணிந்துக் கொண்டதாக கனவு வேறு.. அந்த உடை கைக்கு வருவதற்காக காத்திருந்தேன். டெய்லர் சொன்ன அந்த நாளும் வந்தது.

ஜெயக்குமார்

தீபாவளிக்கு முதல்நாள் இரவு, அப்பாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக டெய்லர் கடைக்கு சென்றேன். நான் சொன்னது மாதிரியே டைலர் எல்லாவற்றையும் சரியாக தைத்திருந்தார். அம்மா அப்பாவிடம் காண்பிக்க வேண்டும் என அந்த டிரஸ்ஸை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தேன். சைக்கிள் ஸ்டாண்ட் போட்டுவிட்டு, அந்த துணிப்பையை பார்த்தால், என் தலையில் இடி விழுந்தது போன்று ஆகிவிட்டது. ஆம், என் புதுத்துணியைக் காணவில்லை. எங்கோ வரும் வழியில் விழுந்துவிட்டது.

அப்புறம்.. மனம் முழுதும் கவலை, துன்பம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. மிகுந்த சோகத்துடன் வீட்டில் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அப்பா வந்தார். என்னிடம் விசாரித்தார். நடந்ததைச் சொன்னேன். "சரி வீடு... வா வேற துணி வாங்கி தரேன்..." என அழைத்தார். 'அப்பா நீ துணி வங்கி கொடுத்துடுவ, அதை யாரு தைக்கிறது... இந்த துணி கொடுத்து ஒரு வாரம் அப்புறம் தான் டைடெய்லர் தைச்சியே கொடுத்தார். இப்போ துணி வாங்கி கொடுத்தா அவர் எப்போ தைச்சி தருவார்...' என சோகம் கலந்து சொன்னேன். 'சரி வா வேற என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்' எனக்கூறி, என்னை துணிக் கடைக்கு அழைத்துச் சென்று, துணி வாங்கிவிட்டு, அங்கிருந்து டெய்டைலரிடம் அழைத்து சென்றார்.

ஜெயக்குமார்

அங்கே, டைலர் கடைக்காரரிடம், 'இந்த துணியை நைட்டுக்குள்ள தைச்சி கொடுத்துடுப்பா.. இதுக்கு டபுள் கூலி கூட வங்கிக்கோ. எனக்கு என் மகனோட சந்தோஷம்தான் முக்கியம்" எனப் பேசினார். அந்த டெய்லரும் என் மனதைப் புரிந்துகொண்டார். என் அப்பாவை அந்த டைலருக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால், இரவு முழுவதும் அந்த டைலர் இருந்து, எனக்கான அந்த உடையைத் தைத்து கொடுத்தார். அந்த துணியை சைக்கிள் முன் பகுதியில் கையிறு வைத்து கட்டி, என் கண் பார்வையிலேயே வீட்டுக்கு கொண்டு வந்தேன். இப்படி ஒரு தீபாவளி கொண்டாட்டத்தையும், அந்த டைலரையும் என்னால் மறக்கவே முடியாது.

``நான் சிறுவனாக, இளைஞனாக இருக்கும்போது ரொம்ப தீவிரமா வெடி வெடிப்பேன். என் நண்பர்களில் சிலர் ஊசி வெடியையே பயந்து பயந்து வெடிக்கும்போது, நான் லட்சுமி வெடியையே கையால் கொளுத்திப்போட்டு வெடிப்பேன். இளம்கன்று பயமாறியாது என்பது போலதான் வெடித்துக் கொண்டிருப்பேன். அப்படி நான் செயல்பட்டிருக்கக் கூடாது, கைகளால் வெடியை கொளுத்திப் போடுவது தவறு என்பதை பின்புதான் உணர்ந்தேன். எனக்கு வெடி வெடிப்பது மிகவும் பிடிக்கும். அரசியலுக்கு வந்தப் பிறகு என் தொகுதி மக்களுடன் வெடி வெடித்து கொண்டாடுகிறேன். நான் இளமையில் செய்த பாதுகாப்பற்ற முறையில் செயல்படாமல், மக்கள் பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.”

ஜெயக்குமார்

``எனக்கு எப்போதும் தீபாவளி தீபாவளிதான். அந்த கொண்டாட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அரசியலுக்கு வந்தப் பின்பு, என் தொகுதி மக்களும் என் குடும்பம் தான். அதனால், ஒவ்வொரு தீபாவளி அன்றும் என் தொகுதி மக்களுடன் வெடி வெடிப்பது, வாழ்த்து சொல்வது என அவர்களுடன் கொண்டாடி வருகிறேன். இந்தக கொண்டாட்டம் மனநிறைவாக இருக்கும். என் தொகுதி மக்களிடமிருந்து வரும் முதல் வாழ்த்துதான் எனக்கு ஸ்பெஷல் வாழ்த்தாகவும் இருக்கும். அதனால் கொண்டாட்ட இடம் வேண்டுமானால் மாறியிருக்கலாம். கொண்டாட்டம் கொண்டாட்டம்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். விகடன் வாசகர்களுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துகள்.” என்கிறார் அதே குதூகலத்துடன்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

Tamil News Live Today: தொடங்கியது தவெக செயற்குழு கூட்டம்! நிறைவேற்றப்படும் 26 தீர்மானங்கள்?

முதல் மாநாட்டுக்குப் பிறகு நடைபெறும் செயற்குழு கூட்டம்!விஜய்தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27-ல் நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கொள்கைகளும், விஜய்யின் உரையும் கடந... மேலும் பார்க்க

Canada: அமித் ஷா மீது கனடா முன்வைத்த குற்றச்சாட்டு: கொதிக்கும் இந்திய அரசு! - என்ன நடக்கிறது?

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட குடியுரிமைப் பெற்ற சீக்கியர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின... மேலும் பார்க்க

`தம்பி என்பது வேறு; விஜய் ஒன்னு கொள்கையை மாத்தணும், இல்லைன்னா..!' - சீமான் விமர்சனம்

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடந்து முடிந்ததிலிருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் அரசியல் கொள்கை குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.அந்தவகையில், நாதக சார்பில் நேற்று ந... மேலும் பார்க்க

Prashant Kishor : `தேர்தல் ஆலோசனைக்கு நான் வாங்கும் கட்டணம்..' - வெளிப்படையாக பேசிய பிரசாந்த் கிஷோர்

பீகார் மாநிலத்தின் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர், தராரி ஆகிய நான்கு தொகுதிகளில் வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலுக்கான முடிவு 23-ம் தேதி வெளியாகும். எனவ... மேலும் பார்க்க

Iron Beam: 'அயர்ன் டோமின் அட்வான்ஸ்ட் வெர்சன்' - அறிமுகம் செய்ய உள்ள இஸ்ரேல்!

பாலஸ்தீனம், லெபனான், ஈரான்...என இஸ்ரேல் தற்போது போரிட்டு வரும் நாடுகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகின்றன. இத்தனை நாடுகளிடம் இஸ்ரேல் போரிட்டாலும் அது இன்னமும் பலமாக உள்ளது என்றால் அதற்கு அமெரிக்கா ஒரு... மேலும் பார்க்க

Tvk மாநாடு: ``விஜய் தன் அரசியல் எதிரியாக முன்னிறுத்தியது யாரை?" - விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

த.வெ.க முதல் மாநாட்டில் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் விஜய், "கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே எதிரியை அறிவித்துவிட்டேன். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம... மேலும் பார்க்க