செய்திகள் :

Doctor Vikatan: வெளியே தொங்கும் காப்பர் டி நூல்... ஆபத்தா, அகற்ற வேண்டுமா?

post image

Doctor Vikatan: நான் 2 வருடங்களுக்கு முன்பு காப்பர் டி பொருத்திக்கொண்டேன். கடந்த சில மாதங்களாக அதன் நூல் வெளியே வந்தது போல உணர்கிறேன். இதற்கு வாய்ப்பு உண்டா... இதை எப்படி சரிசெய்ய வேண்டும்? அகற்றிவிட்டு வேறு போட்டுக்கொள்ள வேண்டுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் 

நித்யா ராமச்சந்திரன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காப்பர்-டி பொருத்தப்பட்ட நிலையில், தற்போது அது திடீரென கீழே இறங்கியிருப்பதாக உணர்கிறீர்கள். இது காப்பர்-டி சற்றே இடம் பெயர்ந்திருப்பதற்கான 'பார்ஷியல் டிஸ்ப்ளேஸ்மென்ட்' (Partial Displacement) என்ற நிலைக்கான சாத்தியத்தைக் குறிக்கிறது. 

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், கர்ப்பப்பை வாயில் (Cervix) சில மாற்றங்கள் நிகழக்கூடும். இதன் காரணமாகக் காப்பர்-டியின் நூல் சற்றே நீளமாகத் தெரிவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய சூழலில் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவர் உங்கள் கர்ப்பப்பையைப் பரிசோதித்துவிட்டு (Pelvic Examination), காப்பர்-டி சரியான நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்வார்.

காப்பர்-டி அதன் இடத்திலிருந்து முழுமையாக நகர்ந்திருந்தால், அதனை அகற்றிவிட்டுப் புதிய கருத்தடை சாதனத்தைப் பொருத்த வேண்டியிருக்கும். ஒருவேளை அது சரியான இடத்தில்தான் உள்ளது... ஆனால், அதன் நூல் மட்டுமே நீளமாக இருக்கிறது என்றால், மருத்துவர் அந்த நூலைச் சற்றே வெட்டி (Trim) சரி செய்வார். அதன் பிறகு காப்பர்-டி அதே நிலையில் தொடர்வதில் சிக்கல் இருக்காது.

வழக்கத்திற்கு மாறான மற்றும் துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல் இருந்தாலோ, கடுமையான வயிற்றுவலி இருந்தாலோ... தாமதிக்காமல் மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள்.

இவற்றைத் தாண்டி, சில தருணங்களில் நீங்கள் அவசரமாக மருத்துவரை அணுக வேண்டியிருக்கலாம். அதாவது,  உங்களுக்குக் கீழ்க்காணும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.


கருப்பைத் தொற்று (Pelvic Infection) ஏற்பட்டாலோ, வழக்கத்திற்கு மாறான மற்றும் துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல் இருந்தாலோ,
கடுமையான வயிற்றுவலி இருந்தாலோ... தாமதிக்காமல் மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள். மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு,  தொற்று மேலே பரவாமல் தடுக்கவும், பாதிப்புகளைத் தவிர்க்கவும் காப்பர்-டியை அகற்றிவிட்டு உரிய சிகிச்சையை அளிப்பார். எனவே, இதில் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: நுரையீரலில் கோக்கும் சளியை உறிஞ்சி எடுத்து வெளியேற்றிவிட முடியுமா?

Doctor Vikatan: என்நணபனுக்கு60 வயதாகிறது. அவனுக்குஎப்போதும் சளி பிரச்னை இருக்கிறது. சளியை அகற்ற மாத்திரைகள் எடுத்தும்குணமாகவில்லை. இந்நிலையில், சளியை உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை இருப்பதாகவும் அதைச்செய்... மேலும் பார்க்க

Doctor Vikatan: இதய நோயாளிகள்... ஒருவேளையோ, ஒரு நாளோ மருந்துகளைத் தவறவிடுவது ஆபத்தாகுமா?!

Doctor Vikatan: இதயநோயாளிகளுக்குகொடுக்கப்படும் மருந்துகளை ஒருநாள்கூடதவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டுமா... மறதியின் காரணமாக அல்லது வேறு காரணங்களால் ஒருநாள், இரண்டு நாள்கள்மாத்திரைகளைத்தவறவிட்டால் ஆபத்தா?ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் அசைவம் சாப்பிடக் கூடாதா?

Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாள்களில்அசைவ உணவுகளையும் சைவத்திலுமே சில உணவுகளையும் சாப்பிடக் கூடாது என்கிறார்களே... அது உண்மையா...? எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் இது போன்ற கட்... மேலும் பார்க்க

`கொலஸ்ட்ரால்-ன் அவசியமும் ஆபத்தும்... அதிமருந்தாகும் பூண்டு!' - விளக்கும் மருத்துவர்

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் நேரம் இல்லாத காரணத்தால், சீக்கிர உணவு (fast food) மற்றும் எண்ணெய், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி உண்ண ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பழக்கங்கள் உடலில் த... மேலும் பார்க்க

Doctor Vikatan: நகம் கடிக்கும் பழக்கத்தால் வயிற்றில் பூச்சிகள் உருவாகுமா?!

Doctor Vikatan: என்குழந்தைக்கு நகம் கடிக்கிறபழக்கம் இருக்கிறது. எவ்வளவோ சொல்லியும் அந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. அவனுக்குஅடிக்கடி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருகின்றன. நகம் கடிக்கும் பழக்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஹேர் எக்ஸ்டென்ஷன் சிகிச்சைகள்... கூந்தலை வளர்க்குமா, பாதிக்குமா?

Doctor Vikatan: முடி வளர்ச்சி குறைவாக உள்ள பலரும் இன்று ஹேர் எக்ஸ்டென்ஷன் எனப்படும் சிகிச்சையைச் செய்துகொள்வதைப் பார்க்கிறோம். அந்தச் சிகிச்சையைச் செய்துகொண்டால், முடி வளர்ச்சி அதிகரிக்குமா.... ஹேர் எ... மேலும் பார்க்க