``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அன...
Doctor Vikatan: குழந்தையின் இடது கைப்பழக்கம் அப்படியே விடலாமா, மாற்ற வேண்டுமா?
Doctor Vikatan: என் குழந்தைக்கு 3 வயதாகிறது. அவளுக்கு இடதுகை பழக்கம் இருக்கிறது. அதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ, வலக்கை பழக்கத்துக்கு மாற்ற வேண்டும் என்கிறார்கள். இரண்டில் எது சரி?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

குழந்தையின் இடது கைப்பழக்கத்தை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. மாறாக, குழந்தையிடம் இயற்கையாக அமைந்துள்ள அந்தத் திறமையை போற்றிப் பாதுகாப்பதுடன், வலது கைப்பழக்கத்தையும் இணைத்து, அவர்களை ஓர் அதிசயமான ஒருங்கிணைந்த திறமைசாலியாக (Ambidextrous) உருவாக்க முயற்சி செய்வதுதான் மிகவும் சிறந்த அணுகுமுறையாகும்.
நம்முடைய உடலின் இயக்கமும் திறமையும் பெரும்பாலும் மூளையின் எந்தப் பகுதி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் பொறுத்தது.
பொதுவாக, வலது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இடது மூளை ஆதிக்கம் செலுத்தும் (Left Hemisphere). அதன் விளைவாக, லாஜிக்கல் சிந்தனை, கணிதம் மற்றும் பகுப்பாய்வுத் திறனுடன் வளர்வார்கள்.
அதுவே, இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது மூளையின் (Right Hemisphere) ஆதிக்கத்தால், தனித்துவமான படைப்பாற்றல், கற்பனை, ஆக்கபூர்வமான மற்றும் பக்கவாட்டுச் சிந்தனை (Lateral Thinking) போன்ற திறமைகளுடன் வளர்கிறார்கள்.
இந்த வலது மூளைத் திறனை மாற்றுவதற்கு பதிலாக, இரண்டு கைகளையும் அழகாக, லாவகமாகப் பயன்படுத்தும் இருகைப்பழக்கம் (Ambidexterity) என்னும் நிலையை அடைய உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்தலாம்.

இந்தியாவில் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு குழந்தைகளைப் பயிற்றுவித்து, அவர்கள் குறைந்த நேரத்தில் அதிகத் திறனுடன் தேர்வுகளில் எழுதிச் சாதிக்க வைத்த செய்தி ஒன்று சமீபத்தில் தெரியவந்தது.
எனவே, உங்கள் குழந்தையின் இடது கைப்பழக்கம் அவர்களின் தனித்துவமான பலம். அதனுடன் வலது கைப்பழக்கத்தையும் இணைப்பது, அவர்களின் எதிர்காலத்தை மேலும் பிரகாசமாக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.








.jpg)











