செய்திகள் :

Don 3 விவகாரம்: "இனி அவருடன் பணியாற்ற விரும்பவில்லை"- ரன்வீர் சிங்கின் சமரசத்தை ஏற்க பர்ஹான் மறுப்பு

post image

நடிகர் ஷாருக்கான் நடித்து பெரிய அளவில் ஹிட்டான டான் படத்தின் மூன்றாவது பகுதியாக டான் 3 படத்தை எடுக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் முடிவு செய்து ஷாருக்கானை அனுகினார். ஆனால் அதில் நடிக்க ஷாருக்கான் மறுத்துவிட்டார்.

இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் நடிக்க சம்மதித்தார். படப்பிடிப்புக்கான வேலைகள் முழு வேகத்தில் நடந்து கொண்டிருந்தன. ஆனால் படப்பிடிப்பு தொடங்க இரண்டு வாரமே இருந்த நிலையில் திடீரென அப்படத்தில் நடிக்க முடியாது என்று ரன்வீர் சிங் தெரிவித்துவிட்டார்.

இதனால் படப்பிடிப்புக்கான வேலைகளைத் தொடங்கியதில் தனக்கு 45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி அத்தொகையைக் கொடுக்க வேண்டும் என்று ரன்வீர் சிங்கிடம் பர்ஹான் அக்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே பேசி தீர்வு காண முன்னணி நடிகர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை. பர்ஹான் அக்தர் தரப்பில் திரைப்பட ஊழியர்கள் சங்கத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்

இதனால் ரன்வீர் சிங்கிற்கு திரைப்பட ஊழியர் சங்கம் தடை விதித்து இருக்கிறது. இவ்விவகாரத்தில் நடிகர் சல்மான் கானும் சமரசம் செய்ய முயன்றார். இரு தரப்பினரிடமும் சல்மான் கான் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

சமீபத்தில் இரு தரப்பினரிடமும் பேசி, தங்களது பிரச்னைகளைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளுமாறு சல்மான் கான் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இவ்விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் அல்லது திரைப்பட அமைப்பின் தலையீடும் இல்லாமல், ரன்வீர் மற்றும் பர்ஹான் தங்களது கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ளுமாறு சல்மான் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இவ்விவகாரத்தில் பிடிகொடுக்காமல் இருந்து வந்த ரன்வீர் சிங் இப்போது இறங்கி வந்து இருக்கிறார்.

பர்ஹான் அக்தரின் மற்றொரு படத்தில் நடித்து கொடுக்க தயாராக இருப்பதாகவும், பர்ஹான் அக்தரின் சகோதரி சோயா அக்தர் படம் ஒன்றிலும் நடித்து கொடுக்க தயாராக இருப்பதாக ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை பர்ஹான் அக்தர் நிராகரித்துவிட்டார்.

பர்ஹான் அக்தர் மற்றும் அவரது சகோதரி சோயா அக்தர் ஆகிய இரண்டு பேரும் இனி ரன்வீர் சிங்குடன் பணியாற்ற தயாராக இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இதனால் நிலைமை மேலும் சிக்கலாகி இருக்கிறது.

டான் 3 படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வந்ததாலும், படத்திற்கான கதை முழுமையடையவில்லை என்றும் கூறி இப்படத்தில் இருந்து ரன்வீர் சிங் விலகியதாகக் கூறப்படுகிறது. திரைப்பட ஊழியர் சங்கத்தின் தடையால் ரன்வீர் சிங் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை ஹைதராபாத்திற்கு மாற்றி இருக்கிறார்.

"சச்சின், கோலியை விட சிறப்பாக விளையாட வேண்டும்" - சூர்யவன்ஷியை வாழ்த்திய கங்கனா ரனாவத்

நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயதுடைய இளம் வீரரான சூர்யவன்ஷி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.இந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை ... மேலும் பார்க்க

Aamir Khan: ஷாருக்கான், சல்மான் கான் முன்னிலையில் திருமணம்; கௌரியை மணமுடிக்கும் ஆமீர் கான்!

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டார். ஆனால் விவாகரத்து செய்த பிறகு இரண்டு முன்னாள் மனைவிகளிடமும் சுமூக உறவை பேணி வரும் ஆமீர் கான் கடந... மேலும் பார்க்க

'என்னை நானே பலமுறை துன்புறுத்தி இருக்கிறேன், ஆனால்.!'- உடற்பயிற்சி குறித்து டாப்ஸி அட்வைஸ்

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையான டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.சமீபத்தில் அனுபவ் சின்கா இயக்​கத்​தில் அவர் நடித்த ‘அஸி’ என்ற திரைப்​படம் வெளி​யானது.தொ... மேலும் பார்க்க

"நாங்கள் தலைக்கனம் பிடித்தவர்கள் அல்ல" - ரசிகருடனான செல்பி விவகாரம் குறித்து பூஜா ஹெக்டே விளக்கம்

வருண் தவான், மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே நடிப்பில் 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை'ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியிருக்கும் இ... மேலும் பார்க்க

'இன்ஸ்டாவில் பாலிவுட் பிரபலங்களை Unfollow செய்தது ஏன்?' - இயக்குநர் கரண் ஜோகர் விளக்கம்

பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தி இயக்கியும் இருக்கிறார். அவர் திடீரென இன்ஸ்டாகிராமில் ஷாருக் கான், ரன்வீர் சிங், கரீனா கபூர் கான், ஜ... மேலும் பார்க்க

தயாராகும் கங்குலியின் பயோபிக்; படப்பிடிப்பு தளத்திற்கு வந்த கங்குலி; யார், யார் நடிக்கிறார்கள்?

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி வரும் பயோபிக் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்திருக்கிறத... மேலும் பார்க்க