செய்திகள் :

Grace Antony: `நிறைய நாட்கள் அழுதிருக்கேன், ஆனா.!’ - 8 மாதங்களில் 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி

post image

2016-ஆம் ஆண்டு வெளியான 'ஹேப்பி வெட்டிங்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிரேஸ் ஆண்டனி.

அதன்பின், 2019-ஆம் ஆண்டு வெளியான 'கும்பலங்கி நைட்ஸ் ' என்ற படத்தில் சிம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 'ரோர்ஷாச்', 'தமாஷா','அப்பன்' போன்று பல படங்களில் நடித்திருக்கிறார்.

கிரேஸ் ஆண்டனி
கிரேஸ் ஆண்டனி

தமிழில் 2022 ஆம் ஆண்டு வெளியான 'சதுரங்க வேட்டை - 2' நடித்திருந்தார். அதன்பிறகு ராம் இயக்கத்தில் வெளியான 'பறந்து போ' படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் நடந்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கிரேஸ் ஆண்டனி உடல் எடையைக் குறைத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் பதிவில், " 8 மாதங்களில் 15 கிலோ குறைத்திருக்கிறேன். அதாவது 80 கிலோவில் இருந்து 65 கிலோ குறைத்திருக்கிறேன்.

உடல் எடையை குறைத்த இந்த பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. போராட்டமாக இருந்தது. நிறைய நாட்கள் அழுதிருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கே நிறைய சந்தேகங்கள் வந்தன.

என்னால் இதனை பண்ண முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம் எனக்குள் வந்தன. ஆனால் அந்தப் போராட்டங்களில் என்னுடைய வலிமையை நான் அறிந்தேன்.

எவ்வளவு சோர்வடைந்தாலும் தன்னம்பிக்கையை கைவிடவில்லை. என்னை சரியாக வழிநடத்திய பயிற்சியாளருக்கு நன்றி. இந்த மாற்றம் ஒரு புகைப்படம் மட்டும் அல்ல.

நீங்களும் முயற்சி செய்கிறீர்கள் என்றால் தொடர்ந்து செய்யுங்கள். ஒருநாள் திரும்பிப் பார்த்தால், ஒவ்வொரு கண்ணீர்க்கும், ஒவ்வொரு சந்தேகத்துக்கும், ஒவ்வொரு முயற்சிக்கும், மதிப்புண்டு என்று உங்களுக்கே தெரியும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Aaro Review: மம்மூட்டி தயாரித்த முதல் குறும்படம்; வசீகரிக்கும் மஞ்சு வாரியர்; எப்படி இருக்கு 'ஆரோ'?

மல்லுவுட்டின் சீனியர் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், மம்மூட்டியின் 'மம்மூட்டி கம்பனி' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கிற 'ஆரோ' குறும்படம் யூட்யூபில் வெளியாகியிருக்கிறது. இது 'மம்மூட்டி கம்பனி' ... மேலும் பார்க்க

Nivin Pauly: 'கம்பேக் எப்போ சேட்டா?' - ஒரே நேரத்தில் 5 நிவின் பாலி படங்கள் டிராப்பா?

இந்தாண்டின் தொடக்கம் முதல் அடுத்தடுத்து பல படங்களை தனது லைன் அப்பில் அடுக்கி வைத்து வந்தார் நடிகர் நிவின் பாலி. அப்படி பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நிவின் பாலி இந்தாண்டு பாக்ஸ் ஆபீஸில் கம்பேக் கொட... மேலும் பார்க்க

Mammootty: ''அதற்கு மம்மூட்டியை பரிந்துரைத்தது ப்ரித்விராஜ்தான்!" - பகிர்கிறார் இயக்குநர்

மம்மூட்டியின் 'களம்காவல்' திரைப்படம் வருகிற 27-ம் தேதி திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் ஜிதின் கே ரோஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் மம்மூட்டியுடன் நடிகர் விநாயகனும் முக்கியக் கேரக்டரில் நடித்திருக்... மேலும் பார்க்க

''எங்களுக்கு குப்பை வேண்டாம்!" - டிரெண்டாகும் #BoycottMajorRavi ஹாஷ்டேக் - பின்னணி என்ன?

மலையாள சினிமாவில், ராணுவத்தை மையப்படுத்தியப் படங்களை எடுத்து பரிச்சயமானவர் மேஜர் ரவி. இந்திய ராணுவத்தில் இருந்த இவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு சினிமாவின் பக்கம் வந்துவிட்டார்.‘கீர்த்தி சக்... மேலும் பார்க்க

Kalyani Priyadarshan: `கிளியே கிளியே' துபாயில் கல்யாணி பிரியதர்ஷன் | Photo Album

kalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshan... மேலும் பார்க்க