செய்திகள் :

Health: வைட்டமின்- டி குறைபாடு இருப்பவர்கள் மீள்வது எப்படி?

post image

மது உடலில் எலும்புகளின் கட்டுமானம் சரியாக இருந்தால்தான் நாம் நிற்க, நடக்க, ஓட என எந்த வேலையையும் செய்ய முடியும். எலும்புகளின் கட்டுமானம் சரியில்லை என்றால் நம்மால் எழுந்திருக்கக்கூட முடியாது. எலும்பின் வளர்ச்சிக்கு கால்சியம் முக்கியமானது. இந்த கால்சியத்தை எலும்பு கிரகிக்க உதவுவது வைட்டமின்- டி. ஒருவர் உணவின் மூலம் கால்சியம் சத்தை மட்டும் எடுத்துக்கொண்டிருந்தால் போதாது. வைட்டமின்- டி இல்லையென்றால் கால்சியம் நமது எலும்புகளில் தங்காமல் வெளியேறிவிடும். இன்சுலின் சுரக்க, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இதய நோய்கள் வராமல் தடுக்க வைட்டமின்- டி கண்டிப்பாகத் தேவை. இதுபற்றி சொல்கிறார் டாக்டர் ரவி சுப்ரமணியம்.

''நம் உடலில் தினமும் புதிய செல்கள் உற்பத்தியாகும், பழைய செல்கள் அழியும். எலும்பு செல்களிலும் இது நிகழும். இப்படி தினமும் புதுப்புது எலும்பு செல்கள் உற்பத்தியாவதை ஆஸ்டியோபிளாஸ்ட் (Osteoblast) என்றும், அழிவதை ஆஸ்டியோகிளாஸ்ட் (Osteoclast) என்றும் அழைப்பர். தினமும் எலும்பு உற்பத்தி ஆவதற்கும், வளர்ச்சிக்கும் வைட்டமின்- டி கட்டாயம் தேவை. வைட்டமின் -டி இல்லாதபோது எலும்பு நலிவடையும்.

சூரிய ஒளியில் இருந்து வரும் பல்வேறு கதிர்களில் புற ஊதாக் கதிர்-பி என்ற கதிர் நமது தோல் வழியாக உடலுக்குள் செல்கிறது. பிறகு கல்லீரல் வழியாக சிறுநீரகத்துக்குச் சென்று 1,25 டை-ஹைட்ராக்சி வைட்டமின் -டி (1,25 Dihydroxy Vitamin-D) ஆக மாறுகிறது. இது கால்சியத்தைக் கிரகித்து எலும்பின் கட்டுமானத்துக்கு உதவுகிறது. வைட்டமின் -டி கிடைப்பதற்காக மருந்து, மாத்திரைகள், பழங்கள், காய்கறிகள் என எதையும் வாங்கிச் சாப்பிட வேண்டியது இல்லை. தினமும் அரை மணி நேரம் சூரிய ஒளி உடலில் பட்டாலே போதும். காலை 7.30 முதல் 9 மணி வரையிலும் மாலை 4.30 முதல் 5.30 மணி வரையிலும் இருக்கும் சூரிய ஒளிதான் உடலுக்கு நல்லது. இந்தத் தருணத்தில் வாக்கிங், ஜாகிங், சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகள், அரை மணி நேரம் செய்வதன் மூலம் வைட்டமின்- டி சத்து உடலுக்குக் கிடைப்பதோடு, தசைகள் வலிமை பெறும், எலும்பு உறுதியாகும். உணவில் மீன், முட்டை ஆகிய பொருள்களில் மிகவும் சிறிதளவு வைட்டமின் -டி உள்ளது.

எலும்பின் காவலன் வைட்டமின் டி

வைட்டமின்-டி பற்றாக்குறை உள்ளதா என்பதை, ரத்தப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். நமது உடலில் வைட்டமின்-டி 30 நேனோ கிராம்.மிலி என்ற அளவைவிட அதிகமாக இருக்க வேண்டும். 10 நே.கி/மி.லி அளவுக்குக் கீழ் இருந்தால், நிலைமை மோசமாகிவிடும். உடல் முழுவதும் வலி இருக்கும். நடக்கவே சிரமப்பட வேண்டியிருக்கும்.

வைட்டமின் -டி குறைபாட்டால் எலும்பு பலவீனம் அடையும். ஆஸ்டியோமலேசியா, ஆஸ்டியோபோரோசிஸ் ஆகிய நோய்கள் தாக்கும். குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் என்ற நோய் வரும். இதனால் குழந்தைகள் வளரும்போது எலும்புகள் விநோதமாக நீட்டிக்கொண்டும், சுருண்டுகொண்டும் இருக்கும். இதனால், குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். இன்சுலினின் சீரான இயக்கத்துக்குக் காரணமான பான்கிரியாடிக்-பீட்டா எனும் செல், வைட்டமின் -டி குறைபாட்டால் பாதிக்கப்படும். இதனால் இன்சுலின் சுரப்பது குறைந்து, சர்க்கரை நோய் வரும். ரத்தக் குழாய்கள் சுருங்கிப்போகும். எனவே, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் கல்லீரல், கணையம், பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் வைட்டமின் -டி குறைபாடு ஒரு காரணம். மேலும் கீல்வாதநோய் (Arthritis) தாக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

வைட்டமின் டி இன்ஜெக்ஷன்!

வைட்டமின் -டி ஊசி போட்டுக்கொள்வதன் மூலம் தேவையான வைட்டமின் -டி கிடைக்கும். தினமும் காலை அல்லது மாலை வேளையில் சூரிய ஒளி உடலில்படும்படி குறைந்தபட்சம் அரை மணி நேரம் நிற்க வேண்டும். புகையிலை, ஆல்கஹால், காஃபின், டின் ஜூஸ், புரோட்டீன் ஷேக் போன்ற பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

கீரை, பாதாம், வால்நட், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். வெயிலில் போகும்போது சன்ஸ்க்ரீன் க்ரீம்களைத் தோலில் தடவுவதைத் தவிர்க்க வேண்டும். அழகுக்காகப் பூசப்படும் இத்தகைய க்ரீம்கள், தோலுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளைத் தடுப்பது மட்டுமின்றி, தோல் புற்றுநோயையும் ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியம் என்பது அறைக்குள் இல்லை'' என்கிறார் டாக்டர்.

வெயிலுக்கு வாங்க ஃப்ரெண்ட்ஸ்!

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

கவுன்சிலரிடையே மோதல்; மேசையை தூக்கிவீசி அமளிதுமளி- களேபரமான சிவகாசி மாமன்ற கூட்டம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தீர்மானம் குறித்து விவாதம் தொடங்கியபோது, பா.ஜ.க. உறுப்பினர் குமரிபாஸ்கர், மாநகராட... மேலும் பார்க்க

ஊட்டி கோடை விழா: பழ கண்காட்சி முதல் மலர் கண்காட்சி வரை! எந்தெந்த தேதிகளில் என்னனென்ன நிகழ்ச்சிகள்?

உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் கோடை வாசஸ்தலமான நீலகிரியில் நடப்பு ஆண்டுக்கான கோடை விழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கண்காட்சி நடைபெறும் பூங்காக்கள் அனைத்தையும் புதுப்பொலிவு... மேலும் பார்க்க

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்; 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... காற்றில் பறந்த போர் நிறுத்தம்!

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி, காசா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த... அன்று தொடங்கியது இஸ்ரேல் - காசா போர். பொதுவாக, இஸ்ரேல் தான் தாக்குதலை தொடங்கும். ஆனால், இந்தத் தடவை, வழக்கத்திற்கு மா... மேலும் பார்க்க

``திமுகவுடன் கள்ளக் கூட்டணி'' - நேருக்கு நேராக முட்டிக்கொள்ளும் தவெக vs பாஜக! - என்ன நடக்கிறது?

டாஸ்மாக் விவகாரம் - தவெக குற்றச்சாட்டுதமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியதை அடுத்து, டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தை அறிவித்து ... மேலும் பார்க்க

ஔவையார்... ஔவை யார்?! - தமிழக சட்டப்பேரவையில் நடந்த சுவாரஸ்ய விவாதம்!

இன்று நடந்து வரும் தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஔவையார் குறித்த சுவாராஸ்ய உரையாடல் சட்டமன்ற உறுப்பினர் ஒ.எஸ் மணியன், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சுவாமிநாதன், சபாநாயகர் அப்பாவுக்கு இடையில் ... மேலும் பார்க்க