சிவகாசி: `வீட்டு வரி ரசீதுக்கு ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம்' -கவுன்சில...
Kamal Haasan: ரீ ரிலீஸுக்கு தயாராகும் கமலின் கல்ட் க்ளாசிக்ஸ் - என்னென்ன படங்கள் தெரியுமா?
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு 'தேவர் மகன் 2' எடுப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் முடிவு செய்தது. முன்பு சிவாஜி - கமல் காம்பினேஷன் போலவே இப்போது கமல் - சூர்யா இணைவது என்றும் திட்டமிடப்பட்டது.
இடையில் கமல் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இப்போது பழைய தேவர் மகன் படத்தை மீண்டும் நவீன 5K தொழில்நுட்பத்தில் வெளியிட தயாராகி விட்டார்.

ஒரு வேளை 'தேவர் மகன் -2' திட்டம் கைவிடப்பட்டதா என்பது குறித்து கமலுக்கு நெருக்கமான புள்ளிகளிடம் விசாரித்தோம், "இந்த தலைமுறை இளைய தலைமுறை பழைய தேவர் மகன் படத்தை பார்த்தது இல்லை.
இப்போது புதுப் படத்துக்கு இசையமைப்பது போல 'தேவர் மகன்' படத்துக்கு ரீ ரெக்கார்டிங் பார்த்து பார்த்து பிரமாதமாக செய்து இருக்கிறார். திரையில் படம் பார்ப்பவர்கள் பிரமித்து போவார்கள்.
̀தேவர் மகன் 2' படத்தில் கமல் , சூர்யா காம்பினேஷன் திட்டம் கைவிடப்படவில்லை. முதல் பாகம் பார்த்து விட்டால் இரண்டாம் பாகத்தை இந்த தலைமுறை நிச்சயம் ரசிக்கும்." என்று கடகடவென கொட்டினார்.
அடுத்து அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தையும் மறுபடியும் வெளியிட போகிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் மேடையிலேயே குள்ளன் வடிவில் கமல் வந்து சிறந்த நடிகர் விருது வாங்கிய நாள் நிகழ்வு நினைவில் ஆடுகிறது.
இதுவரை குள்ளனாக எப்படி நடித்தேன் என்பதை பரமரகசியமாக பாதுகாத்து வருகிறார். கமலின் இந்த அரிய பரிசோதனை முயற்சியை இந்த தலைமுறை கண்டிப்பாக போற்றி, பாராட்டி மகிழும்.

முன்பு குறிப்பிட்ட இரண்டு படங்களை விட கமலுக்கு முற்றிலும் மாறுபட்ட கதையும், கதாபாத்திரமும் கொண்டது பஞ்ச தந்திரம் திரைப்படம்.
முன்பு வெளிவந்த போது ஒரு காமெடிக் காட்சியை ரசித்து முடிக்கும் முன்பே அடுத்த காமெடி வந்து மூச்சு திணற வைக்கும் முழுநீள காமெடி சித்திரம். காமெடி சக்ரவர்த்தி கிரேஸி மோகன் கைவண்ணத்தில் உருவானது.
P.L தேனப்பன் தயாரிப்பில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், கமலின் காமெடி நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.
இந்தக்கால இளைஞர்கள் மனதில் உள்ள பணிச்சுமை அனைத்தையும் அசால்ட்டாக காணாமல் போகச் செய்யும் காமெடி திரைப்படம். தேவாவின் இசையில் மீண்டும் நவீன தொழில்நுட்பத்தில் வெளிவர இருக்கிறது.


















