``ரூ.5 லட்சம் சம்பளம்; வேலை இழந்ததால் மனைவி விவாகரத்து'' - டெலிவரி பாயாக மாறிய ப...
Maithili Thakur: ``நான் பாடிய தமிழ் பாடல் வைரலாகி இருக்கு, அதனால்''- பீகாரின் இளம் MLA நெகிழ்ச்சி
பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் பிரபலமான நாட்டுப்புறப் பாடகியான 25 வயதுடைய மைதிலி தாக்கூர் என்பவர் அலிநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் வினோத் மிஸ்ராவை விடவும் 11 ஆயிரத்து 730 வாக்குகள் அதிகம் பெற்று இளம் எம்.எல்.ஏ-வாகியிருக்கிறார்.
அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
இவர் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களைத் தனது சொந்த குரலில் பாடி வெளியிட்டிருக்கிறார்.
அந்த வகையில் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' என்ற பாடலை மைதிலி தாகூர் முன்பு பாடி இருந்தார்.
இப்போது அவர் எம்எல்ஏ ஆகியுள்ள நிலையில் அவர் பாடிய இந்த 'கண்ணான கண்ணே' பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன. இந்நிலையில் மீண்டும் அந்தப் பாடலை பாடி பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார் மைதிலி தாக்கூர்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "5 வருடத்திற்கு முன்பு நான் பாடிய தமிழ் பாடல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதனால் உங்களுக்காக மீண்டும் இரண்டு வரிகளைப் பாடுகிறேன். இந்தப் பாடலை எனக்கு பிடித்த மற்றும் திறமையான பாடகர் சித் ஸ்ரீராம் தான் பாடியிருக்கிறார்.
இசையமைப்பாளர் இமான் அவர்கள் இந்தப் பாடலை இசையமைத்திருக்கிறார். பாடல் வரிகளைத் தாமரை எழுதியிருக்கிறார்" என அவர் பதிவிட்டிருக்கிறார்.
My throat isn’t fully okay right now, but one of my five-year-old Tamil cover song video is going viral again on Twitter/ social media. So I thought I’d sing a couple of lines for you anyway.
— Maithili Thakur (@maithilithakur) November 16, 2025
Sung by very talented and one of my favourites Sid Sriram ji. Composed by Md Imman ji.… pic.twitter.com/kHaFiIycER

















