செய்திகள் :

Mari Selvaraj: 'அந்த தருணம்'; இளையாராஜா - மாரி செல்வராஜ் கூட்டணி - வெளியான 'மஞ்சணத்தி' பட அறிவிப்பு!

post image

மாரி செல்வராஜ் தன்னுடைய 6-வது படத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோரை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த 'பைசன் காளமாடன்' திரைப்படம், கடந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

'கர்ணன்' திரைப்படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்தபோதே, தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கும் மற்றுமொரு படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. மிகுந்த பொருட்செலவில் பெரிய திரைப்படமாக அது உருவாகும் எனக் கூறப்பட்டது.

Manjanathi - Mari Selvaraj
Manjanathi - Mari Selvaraj

'பைசன் காளமாடன்' திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. 'பைசன் காளமாடன்' படத்தின் ப்ரோமோஷன் வேளையிலும், அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்குவதாக மாரி செல்வராஜும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், மாரி செல்வராஜின் 6-வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.

இப்படத்திற்கு 'மஞ்சணத்தி' எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி ஒரு சிறப்பு காணொளியும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் அறிவிப்பு பற்றிய பதிவில் மாரி செல்வராஜ், ''அந்த உன்னதமான தருணம் இறுதியாக நிகழ்ந்துவிட்டது" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

Mari Selvaraj 6
Mari Selvaraj 6

மாரி செல்வராஜின் 'நவ்வி ஸ்டுடியோஸ்' இப்படத்தைத் தயாரிக்கிறது. 'நவ்வி ஸ்டுடியோஸ்' சார்பாக மாரி செல்வராஜின் மனைவி திவ்யா இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

ஹீரோவாக இரண்டாவது படம் - கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' அபிஷன் ஜீவிந்த்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்ந்தவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். அப்படத்தில் சிறியதொரு கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றவர், அடுத்ததாக நாயகனாகவே நடிக்கக் ... மேலும் பார்க்க

"LIK படத்தின் வசூலை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" - விக்னேஷ் சிவன் கவலை

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படத்திற்கு இணையத்தில் பரவிய விமர்சனங்கள் படத்திற்க... மேலும் பார்க்க

"தனுஷ் அரசியலுக்கு வருவாரா?" - தந்தை கஸ்தூரி ராஜா அளித்த பதில் என்ன?

தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னையில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "இன்றைய பிள்ளைகளுக்கு படிப்... மேலும் பார்க்க

Karuppu: சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா; என்ன கார் தெரியுமா?

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான 'கருப்பு' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இத்திரைப்படம் கிட்டதட்ட 300 கோடி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.ஜி.கே விஷ்ணு'க... மேலும் பார்க்க

`LCU-வில் இணைந்த ரவி மோகன்' - லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய LCU-வில் அடுத்ததாக இணையவிருக்கும் திரைப்படம் 'பென்ஸ்'. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவ... மேலும் பார்க்க

திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் - பெண் தயாரிப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை

பெண் தயாரிப்பாளரை பலர் முன் மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்திய விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர்களான கதிரேசன், ராதாகிருஷ்ணன் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு... மேலும் பார்க்க