செய்திகள் :

Rajini:``அவர்கள் என்னை 'டேய் சிவாஜி' என அழைத்து பேசும்போது" - குதூகலத்துடன் பேசிய நடிகர் ரஜினி

post image

கோவை வேளான் பல்கலைக் கழகத்தில் 1975 - 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் காணொளி காட்சி மூலம் நடிகர் ரஜினிகாந்த் உரையாற்றினார்.

அந்த உரையில், ``சுமார் 50 வருடத்துக்குப் பிறகு எல்லோரும் சந்தித்திருக்கிறீர்கள். பழைய நண்பர்களைப் பார்க்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தக் கல்லூரியில் படித்த பலர் பெரும் பெரும் பதவிகளில், உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு சைலேந்திரபாபு, இறையன்பு போன்றோரை குறிப்பிடலாம்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

நாம் பெரியவராக வளர்ந்ததற்குப் பிறகு, கணவன், அப்பா, தாத்தா, சார் என எத்தனை மரியாதையாக அழைத்தாலும், நம் பழைய நண்பன் பெயர் சொல்லி 'டேய்' என அழைக்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் எவ்வளவு வேலையில் இருந்தாலும், 6 மாதத்துக்கு ஒருமுறை, பெங்களூர் சென்று என்னுடன் பணியாற்றிய டிரைவர், கண்டெக்டர் போன்ற நண்பர்களை சந்திப்பேன்.

என்னுடைய சிவாஜி என்றப் பெயரை நானே மறந்துவிட்டேன். அவர்கள் என்னை டேய் சிவாஜி என அழைத்து பேசும்போது வரும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை. நீங்கள் இப்போது சந்தித்துக்கொள்வது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தித்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும்." எனத் தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் ரியோ படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்; இயக்குநராகும் எஸ்.கே உறவினர் - முழு தகவல்!

இப்போது படங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், அதே வேகத்தை படங்களில் தயாரிப்பிலும் காட்டி வருகிறார். தன்னிடம் விஜய் டிவி காலங்களில் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கு உதவும் விதமாகவும் அந்த... மேலும் பார்க்க

டோலிவுட்டில் தடம் பதிக்கும் கார்த்தி; ரெடியாகும் சர்தார் 2 டீசர்; 'மார்ஷல்' கிளைமாக்ஸ்! - அப்டேட்!

கார்த்தியின் 'மார்ஷல்' படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நோக்கி செல்வதால், அவரது அடுத்த படம் குறித்த பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. 'வா வாத்தியார்' படத்தை அடுத்து திரைக்கு வரும் படமாக 'சர்தார் 2' ரெடியாக... மேலும் பார்க்க

பிப்ரவரியில் திரைக்கு வந்த மற்றும் வரவிருக்கும் ரீ ரிலீஸ் படங்களின் புகைப்பட தொகுப்பு!| Photo Album

‘கில்லி’ From Feb 20‘துணிவு’ From Feb 20‘சூது கவ்வும்’ From Feb 20‘தெறி’ From Feb 27‘அமைதிப்படை’ Upcoming‘தம்பி’ Upcoming‘உயிருள்ளவரை உஷா’ Released‘மௌனம் பேசியதே’ Released‘மின்னலே’ Released‘காதலர் தின... மேலும் பார்க்க

Sarvam Maya: 'மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்' ; வாழ்த்திய சூர்யா,ஜோதிகா - நெகிழ்ச்சியில் ரியா

'சர்வம் மாயா' படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு சூர்யா - ஜோதிகா வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். நிவின் பாலி, அஜூ வர்கீஸ், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'சர்வம் மா... மேலும் பார்க்க