செய்திகள் :

Samantha: 'ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும்' - பூதசுத்தி விவாஹா முறையில் திருமணம் செய்துக் கொண்ட சமந்தா

post image

நடிகை சமந்தாவுக்கும், ‘ஃபேமிலி மேன்’ இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இன்று கோவையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

கோவை இஷா யோகா மையத்திலுள்ள லிங்க பைரவி கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது.

Samantha - Raj Nidimoru
Samantha - Raj Nidimoru

குடும்பத்தினர், நண்பர்கள் என மிக நெருங்கிய வட்டாரம் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

சமந்தாவின் திருமணம் பூதசுத்தி விவாஹா முறையில் நடந்திருக்கிறது.

இந்த பூதசுத்தி விவாஹா திருமண முறை குறித்தும், சமந்தாவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் இஷா யோகா மையம், “லிங்க பைரவி சன்னிதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் ‘பூத சுத்தி விவாஹா’ திருமண செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்துடன் வழங்கப்படுகிறது.

இந்தச் செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

மேலும் தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை பூதசுத்தி விவாஹா வழங்குகிறது.

Samantha - Raj Nidimoru
Samantha - Raj Nidimoru

ஈஷா அறக்கட்டளை, சமந்தா மற்றும் ராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தேவியின் எல்லையற்ற அருளும், பேரானந்தமும் அவர்களின் இணைவில் நிறைந்து இருக்க வாழ்த்துகிறது. ஈஷா யோகா மையத்தில் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கபைரவி தேவி, பெண்தன்மையின் சக்திமிக்க வெளிப்பாடாகும்.

லிங்க பைரவி வளாகம் மக்களின் வாழ்வை வளமாக்கும் சடங்குகளுக்கு ஒரு துடிப்பான இருப்பிடமாகத் திகழ்கிறது.

இங்கு ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவியின் அருளைப் பெறும் வகையிலான சடங்குகள் நடைபெறுகின்றன” எனத் தெரிவித்திருக்கிறது.

Suriya: "நல்ல நண்பர்களாக இருங்க!" - ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்கு சூர்யா வாழ்த்து

ரசிகரின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.'ரெட்ரோ' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியின் 'கருப்பு' படத்தில் நடித்து முடித்திருக்கிற... மேலும் பார்க்க

Samantha: 'இன்பம் எதுவரை! நாம் போவோம் அதுவரை!' - சமந்தா திருமண க்ளிக்ஸ் | Photo Album

Samantha: 1st love முதல் செல்போனுடன் toxic relationship வரை.. மனம் திறந்து பேசிய நடிகை சமந்தா மேலும் பார்க்க

Rajini: ``பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும்'' - விருது பெற்ற ரஜினிகாந்தை வாழ்த்திய சீமான்

கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடந்தது. இந்த விழாவில், உலகம் முழுவதும் 81 நாடுகளிலிருந்து 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.இந்த நி... மேலும் பார்க்க

Samantha: இயக்குநர் ராஜ் நிதிமொருவை கரம் பிடித்த சமந்தா! - கோவையில் நடைபெற்ற திருமணம்

நடிகை சமந்தாவுக்கும், ‘ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இன்று கோவையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் ப... மேலும் பார்க்க

Kamal Haasan: "இன்னும் நான் அந்த நல்ல படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்" - ஓய்வு குறித்து கமல் ஹாசன்

ஸ்டன்ட் இயக்குநர் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்காகத் தயாராகி வருகிறார் கமல் ஹாசன். இப்படத்திற்காக மலையாள சினிமாவிலிருந்து தொழில்நுட்பக் குழுவினரை அழைத்து வந்திருக்கிறார்கள். கூடிய விர... மேலும் பார்க்க

Thalaivar 173 அப்டேட் சொல்லுங்க! - பார்க்கிங் இயக்குநர் பதிவும்; ரசிகர்களின் கமென்ட்டும்

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’. மக்களிடையே நல்ல வரவேற... மேலும் பார்க்க