சேலம்: வனத்துறை குடியிருப்பின் பூட்டை உடைத்து 90 துப்பாக்கித் தோட்டாக்கள் திருட்...
Selvaraghavan: ``யாருக்காகவும் அதை மாத்தக் கூடாது!" - மேடையில் பட அப்டேட் தந்த செல்வராகவன்
விஷ்ணு விஷால் நடித்திருக்கும் ஆர்யன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இப்படத்தில் அவருடன் ஷரதா ஶ்ரீநாத், செல்வராகவன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்திருந்தது.

இன்று இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் செல்வராகவன் அவர் இயக்கும் 7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்தும், அவருடைய மற்ற லைன் அப் குறித்தும் பேசியிருக்கிறார்.
செல்வராகவன் பேசுகையில், "ஏ. ஐ மூலமாக சோகமான முடிவு கொண்ட க்ளைமேக்ஸ் காட்சிகளை சமீப காலமாக மாற்றி வருகிறார்கள்.
அதைப் பற்றிய உங்களின் பார்வை என்ன?" என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் தந்த செல்வராகவன், ``தவறான விஷயமது. அது இங்க மட்டுமல்ல, ஹாலிவுட்டிலும் அது நடக்குது. ஒரு படம் வெளியானதும் அதை அப்படியே விட்டுடணும்.
எந்த க்ளைமேக்ஸை முதல்ல வச்சிருந்தோமோ, அது அப்படியே இருக்கட்டும்னு விட்டுடணும்.
யாருக்காகவும் அதை மாத்தக்கூடாது." என்றவர், " என் லைஃப்ல அனிதா இல்ல, ஆனா இருக்காங்க! 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் வேலைகள் போயிட்டு இருக்கு.

கிட்டத்தட்ட அந்தப் படத்தோட வேலைகள் முடிஞ்சிருச்சு. அந்தப் படத்துல என்ன இரண்டாம் பாகம் செய்திருக்கேன்னு உங்களுக்கு ஒரு ஆர்வம் வரும்.
அந்த ஆர்வத்தினாலதான் நானும் பார்ட் 2 எடுக்கிறதுக்கு ஒத்துகிட்டேன். 70 சதவீத படப்பிடிப்பு முடிஞ்சிருச்சு. இன்னும் கொஞ்சம்தான் முடிக்காமல் இருக்கு.
கூடிய சீக்கிரம் அந்தப் படத்தையும் பார்ப்பீங்க. புதுப்பேட்டை 2'-வும் கூடிய சீக்கிரம் பண்ணுவேன்.
ஆயிரத்தில் ஒருவன் 2' பத்தி கார்த்திக்கு கால் பண்ணிக் கேட்கிறேன்(சிரித்துக்கொண்டே). நிச்சயமா அதுவும் பண்ணலாம்." எனப் பேசியிருக்கிறார்.


















