செய்திகள் :

US: `H-1B visa' மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி

post image

ஹெச்-1பி விசாவிற்கு இதோ அடுத்த நெருக்கடி...

வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல், ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருக்கும் அனைவரின் 'சமூக வலைதளங்களும்' செக் செய்யப்படும் நடைமுறை தொடங்குகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 9-ம் தேதி முதலே, ஹெச்-1பி விசா விண்ணப்பதாரர்களின் நேர்காணல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை சமூக வலைதள பக்கங்களை சரிபார்ப்பது எஃப்-1 மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. ஆனால், இந்த நடைமுறை இப்போது ஹெச்-1பி மற்றும் ஹெச்-4 விசாதாரர்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஏன் இந்த நடைமுறை?

சமூக வலைதளங்களை சரிபார்ப்பது குறித்து அமெரிக்கா, "அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே இந்த ஏற்பாடு. அவர்கள் அமெரிக்காவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறார்களா, உண்மையில் விண்ணப்பதாரர் தகுதியானவர் தானா என்பதை சரிபார்க்கவே இந்த சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை" என்று கூறுகிறது.

'இவர்களுக்கும்' பிரச்னை தான்

இந்த நடைமுறை ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு மட்டும் பிரச்னை அல்ல. ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கும் பிரச்னை தான்.

ஹெச்-1பி விசா என்பது மூன்று ஆண்டுகளுக்கானது. அடுத்த மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு வேண்டுமென்றால், அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி, அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

இனி இவர்களுக்கும் சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை பின்பற்றப்படும். இதனால், இந்த நடைமுறையில் இவர்களது விசாவிற்கும் பாதிப்பு உண்டு. இவர்களது குடும்பத்தினர் விசாவிற்கு பாதிப்பு உண்டு.

ஹெச்-1பி விசா | H-1B Visa
ஹெச்-1பி விசா

அது எப்படி?

ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி, 21 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கும் ஹெச்-4 விசா வழங்கப்படும். ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டால், தானாக ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுடையதும் சரிபார்க்கப்படும். அப்போது அவர்களும் பாதிக்கப்படுவார்கள் தானே?

”கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் எனச் சொல்லி பலர் வந்துள்ளனர்” - திருமாவளவன்

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநில மாநாடு தூத்துக்குடியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்... மேலும் பார்க்க

`தாங்க முடியாத துர்நாற்றம்; இதுதான் சர்வதேச விமான நிலையமா?' - ப.சிதம்பரம் ஆவேசம்

சென்னை விமான நிலையம் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சென்னை விமான நிலையத்தின் 4-வது முனைய... மேலும் பார்க்க

எடப்பாடியுடன் சந்திப்பு; வரவிருக்கும் அமித் ஷா - டெல்லி பயணமான நயினார் நாகேந்திரன்

இந்த ஆண்டின்‌ தொடக்கத்தில் இருந்தே, தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்புகள் தொற்றி கொண்டன.இப்போது தேர்தலுக்குச் சில மாதங்கள்‌தான் உள்ளன. அதனால், பரபரப்புகள் பற்றி சொல்லவே தேவையில்லை.தமிழ்நாட்டில் இப்போது வர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் : `நீதிபதி உணர்ச்சிவசப்பட்டுத் தீர்ப்பளிக்கவில்லை.!’ - எஸ்.ஜி.சூர்யா | களம் 2

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது’... மேலும் பார்க்க

"இந்தியா மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்" - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்; காரணம் என்ன?

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத பரஸ்பர வரி, 25 சதவீத கூடுதல் வரி என மொத்தம் 50 சதவீத வரியும் தொடர்ந்த... மேலும் பார்க்க