செய்திகள் :

With Love: ``96, ஆட்டோகிராப், ராஜா ராணி மாதிரியான படம்.!" - இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார்

post image

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சசிகுமார், சிம்ரன், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், விக்ரம் பிரபு எனப் பெரும் திரைப்பட்டாளமே கலந்துகொண்டது. திரைப்படத்தைப் பார்த்தப்பிறகு திரைப்பிரபலங்கள் சொன்னவை...

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்:

``படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யூத்புல்லாகவும், அதே சமயம் நகைச்சுவையான விதத்திலும் படம் எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு முழுமையான உணர்வு கிடைக்கிறது.

நமக்கு மிக நெருக்கமான 96, ஆட்டோகிராப், ராஜா ராணி போன்ற படங்களைப் பார்த்துவிட்டு வரும்போது என்ன மாதிரியான உணர்வு ஏற்படுமோ, அவற்றின் ஒரு அற்புதமான கலவையாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. அந்த உணர்வுகள் அனைத்தும் இளமைத் துடிப்புடன் திரையில் வரும்போது இன்னும் பிரமாதமாக இருக்கிறது. கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

சமுத்திரக் கனி - சசிகுமார்
சமுத்திரக் கனி - சசிகுமார்

ஷான் ரோல்டனின் இசை படத்தின் உணர்வுகளுக்குப் பெரிய பலத்தைச் சேர்த்திருக்கிறது. இப்படி ஒரு தரமான படத்தை வழங்கிய தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும்."

நடிகர் சசிகுமார்:

``அபியின் முதல் படம் இது என்று சொல்ல முடியாத அளவிற்கு எனர்ஜியுடன் நடித்திருக்கிறார். படத்தை முழுமையாகத் தன் தோளில் சுமந்து மிக அழகாகக் கொண்டு சென்றிருக்கிறார். கதாநாயகி அனஸ்வரா ராஜன் மற்றும் படத்தில் நடித்த மற்ற அனைவரும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

ஒரு புதிய நடிகரின் முதல் படத்திற்குத் தேவையான மிக முக்கியமான விஷயம் சரியான விளம்பரம். அபிக்கு முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய தயாரிப்பாளர்கள் கிடைத்தது மிகப்பெரிய பலம். இந்தப் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு சேர்த்த அவர்களுக்கு நன்றிகள்.

இது இன்றைய இளைஞர்களுக்கான ஒரு அருமையான காதல் கதை. தியேட்டருக்கு வந்து பார்க்கும்போது அந்த உணர்வை முழுமையாகப் பெற முடியும். படம் மிகவும் நேர்த்தியாகவும், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றாக வந்து இந்தப் படத்தை ரசிக்கலாம். நல்ல சினிமாக்களைத் திரையரங்கிற்கு வந்து பார்த்து ஊக்கப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

"இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'சிறை'.'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார்.'7 Screen Studio' லலித் குமார் தயாரித்... மேலும் பார்க்க

With Love: 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் சின்ன டச்..!" - சிம்ரன் டு எஸ்.ஜே.சூர்யா பாராட்டு!

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவி... மேலும் பார்க்க

With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!

இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டிற்கு முன்பே... மேலும் பார்க்க

Re Releases: 'இந்த மாதம் ரீ ரிலீஸ் மாதம்!'; வரிசைகட்டும் ரீ ரிலீஸ் படங்கள் - என்னென்ன தெரியுமா?

கடந்த சில வருடங்களாக ரீ-ரிலீஸ் படங்களும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதற்கு உதாரணமாக 'கில்லி', '3' போன்ற படங்களின் ரீ ரிலீஸை சொல்லலாம்.இந்த ரீ-ரிலீஸ் டிரெண்டில் கடந்தாண்டு வெளியா... மேலும் பார்க்க

Madhavan: "நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்!" - நடிகர் மாதவன்

நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே அவர் வலம் வந்தார். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிரு... மேலும் பார்க்க