செய்திகள் :

Zomato: பதவி விலகிய சொமோட்டோ நிறுவனர்; டெலிவரி ஊழியர்களின் போராட்டம்தான் காரணமா? - பின்னணி என்ன?

post image

சொமேட்டோ மற்றும் பிளிங்கிட் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான 'எடர்னல்' (Eternal)-ன் நிறுவனராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தவர் தீபிந்தர் கோயல். இந்த மாத தொடக்கத்தில், பல்லாயிரக்கணக்கான டெலிவரி ஊழியர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கிக் எகானமிக்கு ஆதரவாகப் பேசிய திபிந்தர் கோயல், ``கிக் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதனால், லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரம் வழங்கியுள்ளது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சமூக விரோதிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். கிக் எகானமி என்பது குறுகிய கால வேலை வாய்ப்பு மட்டுமே.

தீபிந்தர் கோயல்
தீபிந்தர் கோயல்

ஏனெனில், இந்தத் தளங்களில் அடிப்படை குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை, மாறாக 'இன்சென்டிவ்' (Incentives) அடிப்படையிலேயே வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது." என விமர்சித்திருந்தார். அவரின் இந்த விமர்சனம் தொழிலாளர் சங்கங்களின் கோபத்தைத் தூண்டியது. மேலும் டெலிவரி ஊழியர்களின் பணிச் சூழல் குறித்தும் இணையத்தில் பெரும் விவாதம் கிளப்பியது.

இந்த நிலையில், எடர்னல் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபிந்தர் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா கடிதத்தில், ``சமீபகாலமாக, அதிக ரிஸ்க் மற்றும் சோதனைகள் நிறைந்த புதிய யோசனைகளின் மீது எனது கவனம் குவிந்திருக்கிறது.

எடர்னல் போன்ற ஒரு பொது நிறுவனத்திற்கு வெளியே இருந்து இத்தகைய யோசனைகளை முன்னெடுப்பதே சிறந்தது. இந்த மாற்றம் எடர்னல் நிறுவனம் தனது இலக்கில் தீர்க்கமாகச் செயல்பட உதவும். அதே நேரத்தில் எடர்னல் நிறுவனம் சிக்கலுக்கு உட்படாத புதிய யோசனைகளை ஆராய எனக்கு இது இடமளிக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தீபிந்தர் கோயல்
தீபிந்தர் கோயல்

தீபிந்தர் கோயலுக்கு பதிலாக பிளிங்கிட் நிறுவனத்தின் தற்போதைய CEO அல்பீந்தர் திண்ட்சா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தீபிந்தர் கோயல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் துணைத் தலைவராக நீடிப்பார் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தீபிந்தர் கோயல் தற்போது Continue என்ற நீண்ட ஆயுள் குறித்த ஆராய்ச்சி மையத்தையும், LAT Aerospace என்ற குறுகிய கால விமானப் பயண நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

துலாபாரத்தில் நாய்: நடிகையின் செயலால் வைரலான வீடியோ; பக்தர்கள் கண்டனம் - நடிகையின் விளக்கம் என்ன?

தெலுங்கில் சமீபத்தில் வெளியான 'தி கிரேட் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷோ' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை டினா ஸ்ராவ்யா. இவர் கடந்த புதன்கிழமை தெலங்கானா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பழங்குடியின தெய்வங்க... மேலும் பார்க்க

பிரபலமாகும் ``Are you dead?" செயலி: சீனாவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை! - என்ன காரணம்?

நவீன உலகில் முதியவர்களும், தனிமையில் வசிப்பவர்களும் ``நாம் இறந்து போனால் அதை யார் அறிவார்கள்?" என்ற அச்சத்தை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் "தனிமை மரணங்கள்" (Lonel... மேலும் பார்க்க

``ஆண்கள் அணைவரையும் சிறையில் அடைத்துவிடலாமா?" - விமர்சிக்கப்படும் நடிகை ரம்யாவின் பதிவு!

நாய்கள் மீது அன்பு கொண்டவர்களும், நாய்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கச் சட்டம் கடுமையாக இருக்க வேண்டும் என வாதிடுபவர்களும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீத... மேலும் பார்க்க

``ஸ்மார்ட் போன், ஆஃப் பேன்ட் அணியத் தடை; பைஜாமா அணிய வேண்டும்" - உ.பி கிராமங்களின் முடிவு!

ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்கள் சிறுமிகளுக்கு ஸ்மார்ட்போன்களுக்குத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு பரவலாக எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொ... மேலும் பார்க்க

``நாளையுடன் உலகம் அழியப்போகிறது" - தீவிரமாக கப்பல் கட்டும் எபோநோவா?: யார் இவர்? என்ன சொல்கிறார்?

இஸ்லாம் குர்ஆனிலும், கிறிஸ்தவம் பைபிலிலும் நூஹ் - நோவா என்பவரின் சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறது. உலகை அழிக்க நினைத்த இறைவன் இவர் மூலம் நல்லவர்களை காப்பாற்றி இந்த உலகை மீளுறுவாக்கம் செய்ததாக அந்த சம... மேலும் பார்க்க

"நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும்" - லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில... மேலும் பார்க்க