செய்திகள் :

`ஊழல்தான் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றக் காரணம்'- மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் செளஹான்

post image

ஈரோடு மாவட்டத்துக்கு இன்று வருகை தந்திருந்த மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளஹான் வில்லரசம்பட்டியில் மஞ்சள் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்தை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த ஆண்டு 100 நாள் வேலைத் திட்டத்துக்காக ரூ.5,000 கோடிக்குமேலான நிதியை பிரதமர் நரேந்திர மோடி ஒதுக்கியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ரூ.9,000 கோடி ரூபாய் மத்திய அரசு விவசாயிகளுக்குத் தருகிறது. ஆனாலும் அது உரிய பயனாளிகளுக்கு வேலையும், பணமும் சென்றடையவில்லை. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடுகளும், ஊழலும் நடைபெற்றது. இதை சரி செய்யவே மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டு, அந்த திட்டத்தில் தற்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய திட்டத்தின்படி, 125 நாட்கள் வேலை தருவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. வேலை தரவில்லை என்றால் அதற்கான பணத்தை கட்டாயம் கொடுக்கவேண்டும். வேலை செய்து 15 நாட்களுக்குள் பணம் வரவில்லை என்றால் வட்டியுடன் கொடுக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் வழிவகுக்கிறது.

சிவ்ராஜ் சிங் செளஹான்

கொத்தனார் வேலை செய்பவர்களுக்கு 6-இல் இருந்து 9 விழுக்காடு வருமானம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் நிதிக்கான பிரச்னை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மாநிலங்களுக்கு பணத்தைக் விடுவித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை எந்த மாநிலத்துக்கும் நிதி நிறுத்தி வைக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு உதவி செய்யவும், தடுப்பணை மூலம் நீரை சேமிக்கும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது‌. தற்போதைய திட்டத்தின்படி, முறைகேடு நடக்காது.நவீன தொழில்நுட்பம் மூலம் வேலை செய்பவர்களின் வங்கிக் கணக்குக்கு பணம் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் இயந்திரத்தை வைத்து பணம் வேறு நபர்களுக்கு சென்றது. இனி அது எதுவும் நடக்காது என்பதால் சிலர் இதை எதிர்க்கின்றனர். உலகத் தரத்திலான மஞ்சள் பரிசோதனை ஆய்வுக் கூடம் ஈரோட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய மஞ்சள் வாரியத்தின் தென் மண்டல அலுவலகம் ஈரோட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு தமிழக அரசுக்கு ரூ.900 கோடி வழங்கி உள்ளது. அதில் விரிவுபடுத்தப்பட்ட குளிர்சாதனக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

கோவை: ஐடி பார்க் அருகே குட்டையில் குளிக்கும் யானைகள்; வனத்துறையினர் கண்காணிப்பு

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருப்பதால், அங்கு யானை, சிறுத்தை, காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அண்மைய காலமாக யானைகள் மற்றும் சிறுத்தைகள் ஊர்ப்... மேலும் பார்க்க