தென்காசி பேருந்து விபத்து: தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி கிருத்திகாவிற்கு அர...
"செங்கோட்டையன் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது" - திருமாவளவன்
செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.
அதனை தொடர்ந்து எடப்பாடி, செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.

அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி.
அதிமுக-வில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் இன்று (நவ.26) செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் செங்கோட்டையன்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம், செங்கோட்டையன் தவெக-வில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த திருமாவளவன், " செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. தன்னை பாஜக அழைத்து பேசியிருக்கிறது என ஏற்கனேவே செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார்.
அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் வெளியேறியது அதிமுகவிற்கு பின்னடைவாக இருக்கும். அதேபோல நண்பர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தவெகவில் பாஜக மற்றும் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் ஊடுருவல் நிகழ்ந்தால், அவருடைய அரசியல் கேள்விக்குறியாக மாறும்" என்று பேசியிருக்கிறார்.

.jpeg)













.jpeg)

