தென்காசி பேருந்து விபத்து: தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி கிருத்திகாவிற்கு அர...
விஜய்- செங்கோட்டையன் சந்திப்பு; விவரம் என்ன?
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரை சந்தித்து செங்கோட்டையன் பேசி வருகிறார்.
செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார் என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. செங்கோட்டையனை தவெகவில் இணைக்கும் பணியை ஆதவ் அர்ஜூனா செய்து வருவதாகவும் பனையூர் வட்டாரத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று கோவையிலிருந்து சென்னை வந்த செங்கோட்டையன் பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ்,பெங்களூரு புகழேந்தி போன்றோரைச் சந்தித்து பேசியிருந்தார்.

காலை 11:30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்ட செங்கோட்டையன் தலைமைச் செயலகத்துக்கு வந்து சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார். இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் சேகர் பாபுவும் செங்கோட்டையனிடம் பேசியிருந்தார். இதனால் செங்கோட்டையனை திமுக இழுக்கப் பார்க்கிறது எனும் பேச்சும் அடிபட்டது.
இந்நிலையில்தான் பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு பிற்பகல் 1 மணியளவில் விஜய் வந்திருந்தார். எம்.எல்.ஏக்கள் விடுதியிலிருந்த செங்கோட்டையன் பட்டினப்பாக்கம் சென்று இப்போது விஜய்யுடன் ஆலோசித்து வருகிறார்.
செங்கோட்டையன் தவெகவில் இணைவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.



.jpeg)










.jpeg)

