செய்திகள் :

``நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?" - எடப்பாடியை தாக்கும் முதல்வர் ஸ்டாலின்!

post image

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.

அதன் பேரில், மத்திய குழு தமிழகம் வந்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தி சென்றனர். ஆனால், இதுவரை எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இதனால், கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நவம்பர் 18-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

ஆனால், நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று தஞ்சாவூரில் தி.மு.க விவசாய அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின.

உடனே, "சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?" என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்.

நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

நயினார், எடப்பாடி பழனிசாமி
நயினார், எடப்பாடி பழனிசாமி

போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என திரு. பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்? கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று திரு. பழனிசாமி நினைக்கிறாரா?

மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த திரு. பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா? உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"திமுக-வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது" - டிடிவி தினகரன்

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "எஸ்.ஐ.ஆர் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை வாக்காளர் பட்டியல் வெளிவரும் வரை பொறுத்து இருந்து ... மேலும் பார்க்க

`உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது’ - சாடும் அண்ணாமலை

திருச்சியில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்திப்பதே இல்லை. கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் த... மேலும் பார்க்க

"அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும்" - அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி, ஆற்றுக்குள் மீன் வளத்தைப் பேணி காக்கும் வகையில் மீன் குஞ்சுகளை ஆற்றுக்குள்ளே விட்டுவருகிறோம்.... மேலும் பார்க்க

டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ்பிரே; என்ன நடந்தது?

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த செயற்கை மழையை வரவைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற காரியங்களில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் காற்று மாசுப... மேலும் பார்க்க

"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, "த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும்" - ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின்... மேலும் பார்க்க