செய்திகள் :

"அதை 60 நாள்கள் படமாக்கினோம்"-'வாரணாசி' படம் குறித்து ராஜமெளலி

post image

ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.
கதாநாயகியாக 'மந்தாகினி' என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா, ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.

பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. 6-ம் நூற்றாண்டின் வாரணாசி, எரி கல் அண்டார்டிகா பனி பிரதேசம், ஆப்பிரிக்கா காடுகள், த்ரேதா யுகத்தில் இராமாயண புராணத்தில் இலங்கையில் நடக்கும் யுத்தக் களம், ராமர் வில் ஒளியில் இருந்து வரணாசி நகரம், திரிசூலத்தை ஏந்தியபடி மகேஷ் பாபு, காளை மீது அமர்ந்து வரும் படத்தின் போஸ்டர் மற்றும் அறிமுக டீசர் வெளியாகியிருக்கிறது.  

இதில் 'வாரணாசி' படம் குறித்துப் பேசியிருக்கும் இயக்குநர் ராஜமெளலி, "என் சிறுவயதிலிருந்தே 'ராமாயணம்' மற்றும் 'மகாபாரத' இதிகாசங்களை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். 'மகாபாரதம்' எனது கனவுப் படம்.

இந்த வாரணாசி படத்தில் பணிபுரியத் தொடங்கியபோது, ​​ராமாயணத்தின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை நான் படமாக்குவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை.

இப்படத்திற்காக முதல் நாள், ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அதில் மகேஷ் பாபு ராமர் கெட்டப்பில் மேக்கப் போட்டதைப் பார்த்து உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது. அந்தப் புகைப்படத்தைத்தான் நான் கொஞ்ச நாள் என் மொபைல் வால்பேப்பராக வைத்திருந்தேன்.

'வாரணாசி' படம் குறித்து ராஜமெளலி
ராஜமெளலி

இந்த இராமாயண எபிசோடை 60 நாள்கள் படமாக்கினோம். ஒவ்வொரு நாளும் ஒரு சவாலாக இருந்தது. இது எனக்கும் மகேஷ் பாபுவுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். உங்கள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மகேஷ் பாபு இதில் ராமராக நடித்திருக்கிறார். இந்த இராமாயண எபிசோடை எடுக்கும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன்" என்று 'வாரணாசி' படம் குறித்துப் பேசியிருக்கிறார்.

Varanasi: "மகேஷ் பாபு ராமரின் உருவத்தில் வந்தபோது..." - ராஜமெளலி ஷேரிங்ஸ்

மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறத... மேலும் பார்க்க

Varanasi: "என் அப்பா சொன்னதைச் செய்திருக்கிறேன்!" - மகேஷ் பாபு

மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறத... மேலும் பார்க்க

Globetrotter: ''இம்முறை காவல்துறை..." - ரசிகர்களுக்கு இயக்குநர் ராஜமெளலி அட்வைஸ்

ராஜமௌலியின் 'க்ளோப்டிராட்டர்' படத்தின் நிகழ்வு வருகிற நவம்பர் 15-ம் தேதி ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. மகேஷ் பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா உட்பட பலரும் இந்த... மேலும் பார்க்க

"கிட்டத்தட்ட விபத்துக்குள்ளாகும் சூழல்" - ராஷ்மிகா உடனான திகில் விமான பயணத்தை பகிர்ந்த ஷ்ரத்தா தாஸ்!

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துவரும் நடிகை ஷ்ரத்தா தாஸ், ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தபோது மரணத்துக்கு அருகில் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். மும்பையில் இருந்து ஹைத்ராபாத்துக்கு பயணித்த... மேலும் பார்க்க

The Girlfriend Review: `சால பாகுந்தி சினிமா ரா!' - எப்படி இருக்கிறாள் இந்த `தி கேர்ள்ப்ரண்ட்'?

முதுகலைப் பட்டப்படிப்பிற்காக வெளியூருக்கு வருகிறார் பூமா தேவி (ராஷ்மிகா). பிறக்கும்போதே தாயை இழந்த பூமா தேவி, தந்தையினால் வளர்க்கப்பட்டவர். கல்லூரியில் கணிதவியல் துறையைச் சேர்ந்த விக்ரம் (தீக்‌ஷித் ஷெ... மேலும் பார்க்க

Rukmini Vasanth: 'மென் மயங்கிக் கிடந்தேனடி என் போதையே' - நடிகை ருக்மினி வசந்த் க்ளிக்ஸ் |Photo Album

Rukmini Vasanth: ``சிறு புன்னகை சிதறினாள்" - ருக்மிணி வசந்த் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album மேலும் பார்க்க