செய்திகள் :

"அந்தப் படத்தின் இசை பிடிக்கவில்லை என 8 மாதங்களுக்குப் பிறகே ஊதியம் கொடுத்தார்" - ஏ.ஆர்.ரஹ்மான்

post image

இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் 2011-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'ராக்ஸ்டார்'.

இன்றுவரை இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்படத்திற்கான ஊதியம் தனக்கு எட்டு மாதங்கள் தாமதமாகத்தான் கிடைத்தது எனப் பகிர்ந்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

டேராடூனில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் இத்தகவலை அவர் பகிர்ந்திருக்கிறார்.

Rockstar Movie
Rockstar Movie

ஏ.ஆர். ரஹ்மான், "'ராக்ஸ்டார்' படத்தின் தயாரிப்பாளர் 'எனக்கு இந்த இசை பிடிக்கவில்லை' என்று சொல்லிவிட்டார்.

அப்போது என் இசைக் கலைஞர்களுக்கான ஊதியத்தையும், என் பயணச் செலவுகளையும் நானே கொடுத்துக் கொண்டிருந்தேன்.

இந்தப் படத்திற்காக எனக்கு ஒரு பைசா கூட வரவில்லை என்ற விஷயத்தை இம்தியாஸ் அலியிடம் கூட நான் சொல்லவில்லை.

படம் வெளியாகி எட்டு மாதங்களுக்குப் பிறகே எனக்கு ஊதியம் வழங்கப்பட்டது. 'ராக்ஸ்டார்' படத்தில் எங்களுக்குப் பெரிதாகப் பிடிக்காமல் உருவான 'ஷெஹர் மே ஹூன் மெயின் தேரே' பாடல், ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் நான்கு மாதங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது.

'ராக்ஸ்டார்' படத்திற்குப் பிறகு, இம்தியாஸ் அலி என்னிடம் ஒரு வித்தியாசமான ஆச்சரியத்தைக் கொண்டு வந்தார். நான் அவரிடம் 'புதிய படம் செய்கிறீர்களா?' எனக் கேட்டேன்.

ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்

அதற்கு அவர், 'சார், இந்தப் படத்தில் ஒரேயொரு பாடல்தான் இருக்கிறது' என்றார். நான் 'பரவாயில்லை. கதை என்ன?' என்று கேட்டேன். பிறகு அந்தப் படத்திற்கு நான் வந்தேன். முதலில் ஒரு பாடல் மட்டுமே அப்படத்திற்குத் திட்டமிட்டிருந்தோம்.

கடைசியில் 14 பாடல்கள் அப்படத்திற்காக உருவாக்கிவிட்டோம். இப்போது 'ராக்ஸ்டார்' படத்தை விட 'ஹைவே' படத்தில்தான் அதிக பாடல்கள் உள்ளன" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Ramayana Part 1: ஆஸ்கர் விருது போட்டியில் நுழைந்த ராமாயணா... எந்த பிரிவில் தெரியுமா?!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரவி துபே உள்ளிட்டோர் நடித்துள்ள 'ராமாயணா: பார்ட் 1' திரைப்படம் கடந்த நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. உலகளவில் ரூ. 1,700 கோடிக்கு... மேலும் பார்க்க

Oscar Awards: ஆஸ்கர் ரேஸில் 2 இந்தியப் படங்கள்; இளையராஜா படத்தோடு நாகாலாந்து படம் சேர்ந்தது எப்படி?

99-வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கிறது. அதற்கான வேலைகளையும் ஆஸ்கர் அகாடமி கவனித்து வருகிறது. இந்தாண்டு இந்தியாவின் சார்பாக 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' பிரிவிற்கு மராத்த... மேலும் பார்க்க

"'ராமாயணா' படத்திற்காக 12 திரைப்படங்களை நான் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டேன்!" - ஏ.ஆர்.ரஹ்மான்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது, ராமாயணா பார்ட் - 1.இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானும், ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான... மேலும் பார்க்க

"சல்மான் கானிடமிருந்து ஐஸ்வர்யா ராயை பாதுகாக்கவே நான் இருந்தேன்!" - பாதுகாப்பாளர் பகிர்ந்த தகவல்

நடிகரும் பாடிபில்டருமான கேதன் கரண்டே என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராயிடம் பாதுகாப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். கேதன் கரண்டேசல்மான் கானிடமிருந்து ஐஸ்வர்யா ராயைப் பாதுகாப்பதற்காகவே தான் பி... மேலும் பார்க்க

Salman Khan: "யார் இவர்கள் எல்லாம்? இவர்கள் என்ன ஏ.ஐ நிபுணர்களா?" - சல்மான் கான் காட்டம்

நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'மாத்ருபூமி' திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. 'மாத்ருபூமி' திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Salman Khanஇப்ப... மேலும் பார்க்க

Alia Bhatt:``மிகவும் அவமரியாதையானது" - திருமண வாழ்க்கை குறித்த விமர்சனத்துக்கு ஆலியா பட் பதில்!

பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர்கள் ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அன்றிலிருந்து இவர்களின் நேர்காணல்... மேலும் பார்க்க