INDvSA: 549 டார்கெட்; சொந்த மண்ணில் வரலாறா, வரலாற்றுத் தோல்வியா - இந்தியாவின் அத...
"ஒவ்வொரு முறையும் மனசு உடையும்"- இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து பத்ரிநாத்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், நவம்பர் 30-ம் தேதி தொடங்கவிருக்கும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் அணியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்திய அணியில் தொடர்ந்து சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் பேசியிருக்கிறார்.

“நான் சஞ்சு சாம்சனுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்திருக்கிறார், அவருடைய ஒருநாள் சராசரி 56 ஆக இருக்கிறது. ஆனாலும் அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் என்ன தவறுசெய்தார் என்றும் எனக்குப் புரியவில்லை.
ரிஷப் பண்ட் அணியில் இருப்பதற்குக்கூட என்னால் காரணம் புரிந்துகொள்ள முடிகிறது. ரிஷப் பண்ட்டின் மிகப்பெரிய ரசிகன். ஆனால் துருவ் ஜூரெல் எந்த அடிப்படையில் அணியில் இருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை.

சஞ்சு சாம்சனின் இடத்தில் நானும் இருந்திருக்கிறேன். நம்முடைய பெயர் அணியில் இடம்பெறாதா எனப் பார்த்து ஏமாறும் ஒவ்வொரு முறையும் மனசு உடையும்” என்று தனது விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.



















