செய்திகள் :

"கார் கொடுக்காததால் கொன்றுவிட்டனர்" - வரதட்சணை கொடுமையால் பெண் சோசியல் மீடியா பிரபலம் தற்கொலை?

post image

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த த்விஷா சர்மா என்ற எம்.பி.ஏ பட்டதாரிப் பெண் சமீபத்தில் போபாலில் உள்ள தனது கணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரைக் கொலை செய்து தூக்கில் தொடங்கவிட்டுவிட்டதாக சர்மாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் சர்மாவின் உடல் இரண்டாவது முறையாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதோடு இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது லக்னோவில் மேலும் ஒரு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கான்பூரைச் சேர்ந்த சோசியல் மீடியா பிரபலமான மான்சி என்பவர் கடந்த 2024ம் ஆண்டு லக்னோவைச் சேர்ந்த ரஜபுத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரஜபுத்தும் சோசியல் மீடியா பிரபலம் ஆவார்.

மான்சி - ரஜபுத்
மான்சி - ரஜபுத்

ரஜபுத்திற்கு இன்ஸ்டாகிராமில் 8 லட்சம் ஃபாலோவர்கள் இருக்கின்றனர். லக்னோவில் உள்ள தனது கணவன் வீட்டில் மான்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கார் கேட்டு கொன்றுவிட்டனர்

மான்சியை கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்துவிட்டதாக மான்சியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், ''திருமணத்தின் போது ரூ.7 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொடுத்தோம். ஆனால் அவை ரஜபுத் குடும்பத்திற்குத் திருப்தியளிக்கவில்லை.

திருமணமான நாளில் இருந்து அவர்கள் அதிக வரதட்சணை கோரி வந்தனர். குறிப்பாக ஒரு கார் கேட்டனர். திருமணமான நாளில் இருந்து போதுமான வரதட்சணை கொண்டு வராததற்காக அவமானப்படுத்தி சித்ரவதை செய்து வந்தனர்.

அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், மான்சியை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்தனர். சித்திரவதை பற்றி மான்சி எங்களிடம் தெரிவித்தார். எனவே சமாதானம் செய்வதற்காக நாங்கள் பல முறை லக்னோ சென்று வந்தோம். ஆனால் இப்போது எங்களது மகள் தற்கொலை செய்து கொண்டாதாகக் கூறுகின்றனர்.

அவர்கள் கொலை செய்து தற்கொலை செய்து கொண்டது போன்று ஜோடித்துள்ளனர்'' என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் வரதட்சணை உட்பட பல்வேறு புகார்களின் அடிப்படையில் ரஜபுத் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நேரில் அழைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க