செய்திகள் :

கிருஷ்ணகிரி தம்பதிக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு - சென்னையைச் சேர்ந்த பெற்றோர் உட்பட 8 பேர் கைது

post image

சென்னையைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை, கிஷ்ணகிரியைச் சேர்ந்த தம்பதிக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவத்தில் குழந்தை மீட்கப்பட்டு குழந்தையின் பெற்றோர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது
கைது

சென்னை காசிமேடு பவர்குப்பம் 2-வது தெருவைச் சேர்ந்த சகாயராஜ் - திலகவதி தம்பதிக்கு ஏற்கனவே ஆண், பெண் என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நான்காவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் பிறந்த குழந்தையை யாரிடமாவது விற்பனை செய்ய நினைத்த இத்தம்பதியினர் தண்டையர்பேட்டையைச் சேர்ந்த பிரதீபாவிடம் தெரிவித்துள்ளனர். அதோடு பிரதீபா, தனக்கு தெரிந்த காசிமேட்டைச் சேர்ந்த வெண்ணிலா, புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கவுசல்யா ஆகியோருடன் ஆலோசனை செய்து குழந்தையை விற்க முடிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தம்பதிக்கு குழந்தை தேவைப்படுவதை அறிந்து அவர்களிடம் 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

இதில் 3 லட்சத்தை சகாயாராஜ்-திலகவதி தம்பதியினரிடம் கொடுத்துவிட்டு மீதி 80 ஆயிரம் ரூபாவை தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர்.

இது குறித்து காசிமேடு காவல்துறையினருக்கு புகார் வந்ததையடுத்து விசாரணையில் இறஙகியவர்கள், சம்பவம் நடந்தததை உறுதி செய்த பின் திலகவதி, பிரதீபா உள்ளிட்ட நால்வரையும் கைது செய்து குழந்தைகள் நலக் குழுவினர் ஒப்படைத்தனர்.

குழந்தை விற்பனை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் கிருஷ்ணகிரி சென்று குழந்தையை வாங்கிய ராமன் - மாதம்மாள் தம்பதியினருடன், அவர்களுக்கு உதவிய கவிதா, ஜெயலட்சுமி ஆகியோரையும் கைது செய்து குழந்தையை மீட்டனர்.

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது, இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.!

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க