செய்திகள் :

கும்பகோணம்: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 15 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு

post image

கும்பகோணம், நாச்சியார் கோயில் அருகே உள்ள பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருப்பூரில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இரண்டாம் வகுப்பு படிக்கும் தனது 6 வயது மகளை அக்கா முறை கொண்டவர் பாதுகாப்பில் விட்டுச் சென்றுள்ளார். அந்த பெண்ணின் மகனுக்கு 15 வயதாகிறது பெயிண்ட் கடையில் வேலை செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுமியை அண்ணன் முறை கொண்ட அந்த 15 வயது சிறுவன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இது அந்த சிறுவனின் அம்மாவுக்கு தெரிந்தும் சிறுமியின் அம்மாவிடம் சொல்லாமல் மறைத்து விட்டார். திருப்பூரில் இருந்து அம்மா தன் மகளுக்கு செல்போனில் வீடியோ கால் மூலம் பேசியிருக்கிறார். அப்போது தன் மகள் முகம் வீங்கியும், உதட்டில் காயமும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே சிறுமியின் அம்மா கிளம்பி கும்பகோணம் வந்து விட்டார். அப்போது பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனின் அம்மா அவரை மிரட்டியதாக சொல்கிறார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமி, சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டதுடன் மயங்கி விழுந்து விட்டதாக சொல்லப்படுகிறது. உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது தெரிந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் சிறுமியின் அம்மா திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு போக்சோ வழக்கு பதிந்து சிறுவனை பிடித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் அம்மா, எ`துவும் அறியாத என் பிஞ்சு மகளிடம் தவறாக நடந்து படுபாதகச் செயலை செய்து விட்டு வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டினர். தாத்தா ஒருவரும் தன்னிடம் தப்பா நடந்து கொண்டதாக என் மகள் சொல்கிறாள். இதை கேட்ட போது எனக்கு நெஞ்சு சுக்கு நூறாகி விட்டது. அக்கா முறை என்பதால் நம்பி வீட்டில் விட்டுச் சென்றேன் இப்படி செய்து விட்டான். இதற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும்' என்றார்.

சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்த கணவன் - ஆதரவின்றி தவிக்கும் 4 பிள்ளைகள்

கேரள மாநிலம் பாலராமபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (46), வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த ஹசீனா (38) ஆகிய இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது; சிக்கியது எப்படி?

கணவரைப் பிரிந்து வாழ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாலியல் வன்முறைகிருஷ்ண... மேலும் பார்க்க

`ரூ.15 லட்சம் கோடி என்ன ஆனது?' செபியின் பிடியில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்!தங்க சாம்ராஜ்யம் சரிகிறதா?

இந்தியாவின் கார்ப்பரேட் உலகில் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிக் கதையாக வலம் வந்தது ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், தங்கச் சுத்திகரிப்பு, நகை ஏற்றுமதி என உலகளாவிய தங்க வ... மேலும் பார்க்க

TVK: மது விற்பனை செய்த பெரம்பலூர் தவெக பிரமுகர்; கட்சியில் இருந்து நீக்கிய மாவட்ட நிர்வாகம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூர்கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் சட்ட விரோதமாகமதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, எஸ்.பி லலித்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் தனிப்படை போலீ... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு: கணவர் வெளியிட்ட வீடியோவால் பதைபதைப்பு; 'மூவரும் நலம்' - போலீஸ் நிம்மதி

இளம் பெண்ணான மனைவி வேறு ஒரு நபருடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும், வீட்டில் ஆண் நண்பருடன் அந்த இளம் பெண் இருக்க செல்போனில் வீடியோ எடுத்து கொண்டே வீட்டுக்குள் வரும் கணவர், அவனை வெளியே வரச்சொல்லு ... மேலும் பார்க்க

பெரம்பூர்: சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம் - ரயில் நிலையத்தில் பயணிகள் அதிர்ச்சி

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வழக்கம் போல பரபரப்பாக இருந்தது. ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் உள்ள படிக்கட்டில் நீல நிற சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக இருந்தது. அதிலிருந்து துர்நாற்றமும் வீசியது... மேலும் பார்க்க