செய்திகள் :

`கை, கால்களை வெட்டினால்தான் சட்டத்தை மதிப்பார்கள்' - கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்

post image

பெங்களூரை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மணிப்பாலில் கைதான மாணவர் அவருடன் சேர்ந்து படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது ஜாமீன் மனு கீழ்க்கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இம்மனு நீதிபதி நடராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது மனுதாரர் எந்த தவறும் செய்யாமல் 3 மாதங்களாக சிறையில் இருப்பதாக குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி நடராஜ், ''உப்பு தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். இன்னும் 4-5 நாட்கள் சிறையில் இருக்கட்டும். சிறைக்குப் பழகட்டும். யாருக்குத் தெரியும், நீங்கள்(மனுதாரர்) தண்டிக்கப்பட்டால், நீங்கள் மீண்டும் (சிறைக்கு) செல்ல வேண்டியிருக்கும்.

குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் உறுதியாகக் கையாளப்படாத காரணத்தால் மக்கள் சாதாரணமாக குற்றங்களைச் செய்கிறார்கள். அதனால்தான் மத்திய கிழக்கு நாடுகளை போலல்லாமல் ஒரு குற்றத்தைச் செய்வது மிகவும் எளிதாகிறது. குற்றவாளிகளை உறுதியாகக் கையாளாததால் சட்டம் அதன் பற்களை இழந்துவிட்டது. குற்றம் செய்பவர்களின் ஒரு காலையோ கையையோ வெட்டினால், மக்கள், ஒருவேளை, சட்டத்தை மதித்து நடப்பார்கள்.

ஜனநாயகம் இருப்பதால், எல்லோரும் அதன் பலனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்கிறார்கள்" என்று நீதிபதி தெரிவித்தார். அதோடு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் கொடுக்க மறுத்த நீதிபதி மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். நீதிபதியின் இக்கருத்து கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

"GDP-யில் 17% உழைப்பு இல்லத்தரசிகளுடையது; அவர்களின் உத்தேச வருமானம் ரூ.30,000" - உச்ச நீதிமன்றம்

இல்லத்தரசிகள் அல்லது குடும்பத் தலைவிகள் என்பவர்கள் வெறும் வீட்டைப் பராமரிப்பவர்கள் மட்டுமல்ல, அவர்கள் நாட்டின் உண்மையான கட்டுமானக் கற்கள் (Building Blocks) என்றும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழ... மேலும் பார்க்க

`தமிழக முதல்வர் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி தருவோம் என்கிறார்; ஆனால்..!' - நீதிபதி விமர்சனம்!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்,உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,`சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறேன்.எங்கள் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவ... மேலும் பார்க்க

`காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்' - தமிழக அரசு

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்... மேலும் பார்க்க

ரூ.634 கோடி லஞ்ச விவகாரம்: `கே.என் நேரு மீது ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு' - ஹைகோர்ட்டில் தமிழக அரசு

முந்தைய திமுக ஆட்சி காலத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவி... மேலும் பார்க்க

“கேரளாவில் இருப்பதால் உயிரோடு இருக்கிறோம்” - மோனாலிசா வழக்கில் உயர் நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்

கும்பமேளா மூலம் சமூக ஊடகங்களில் பிரபலமான மோனாலிசா போஸ்லே மற்றும் அவரது கணவர் முகமது ஃபர்மான் கான் ஆகியோர் தங்களின் கலப்புத் திருமணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர... மேலும் பார்க்க

`சுய விருப்பத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல; காவல்துறை அவர்களை..!' - உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் மனிதக் கடத்தலைத் தடுக்கவும், வணிக ரீதியான பாலியல் சுரண்டலை ஒடுக்கவும் 'இம்மோரல் டிராஃபிக் (தடுப்பு) சட்டம்' நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்தச் சட்டத்தின் விதிகள் (குறிப்பாகப் பிரிவு 17) காவ... மேலும் பார்க்க