`கர்நாடகம், உத்தரவை கடைபிடிக்கவில்லை எனில்.!’ - காவிரி வழக்கில் அதிரடி காட்டிய உ...
``கொடூரமான தீவிரவாத செயல்'' - டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு
கடந்த 10-ம் தேதி, மாலை 6.52 மணியளவில், டெல்லி செங்கோட்டை அருகே 'ஹுண்டாய் ஐ20' கார் வெடித்து சிதறியது. செங்கோட்டை அருகேயே நடந்த குண்டு வெடிப்பு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, பேசப்படுகிறது.
சிசிடிவி காட்சிகள்
நேற்று இரவு, செங்கோட்டை குண்டு வெடிப்பின் புதிய சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் செங்கோட்டை அருகே உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசலாக உள்ளது.
அந்த நெரிசலில், சம்பந்தப்பட்ட காரும் நின்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாகனமாக நகரும் வேளையில், அந்தக் கார் வெடித்து சிதறியிருக்கிறது.
இந்த சம்பவத்தினால் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 20 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

அமைச்சரவை தீர்மானம்
இந்த சம்பவம் குறித்து ஆலோசிக்க நேற்று இரவு பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில், இந்த சம்பவம் 'கொடூரமான தீவிரவாத செயல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு நடந்ததில் இருந்து, அது குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால், மத்திய அரசு பெரிதாக எதுவும் வெளிப்படையாக கூறாதபட்சத்தில், தற்போது தீவிரவாத செயல் என்று முதன்முறையாக அதிகாரபூர்வமாக கூறியுள்ளது.
#Cabinet passes resolution on Explosion near Red Fort in Delhi
— PIB India (@PIB_India) November 12, 2025
The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, expressed its profound grief over the loss of lives in the terrorist incident involving a car explosion near the Red Fort in Delhi on the evening of 10…
#WATCH | Delhi 10/11 Blast: Latest CCTV footage captures the moment of blast#DelhiBlastpic.twitter.com/MjC9fzjqR1
— NDTV (@ndtv) November 12, 2025


















