தேர்தல் வெறும் கொண்டாட்டமல்ல; சமூக நலனை மனதில் வைத்து வாக்களிப்பது எப்படி?
கொம்பு சீவி: `13 வருடத்தில் நிறையப் படங்களில் நடித்திருக்கலாம், ஆனால் என் தம்பி!' - விஜய பிராபகரன்
பொன் ராம் இயக்கத்தில், சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகயிருக்கும் திரைப்படம் ‘கொம்பு சீவி’.
இதில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் புதுமுக நடிகை தார்னிகா நாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.
மேலும் சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

ஸ்டார் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் டிச.19-ம் தேதி வெளியாகயிருக்கிறது.
‘கொம்பு சீவி’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிச.14) நடைபெற்றிருக்கிறது.
இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய பிராபகரன், "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ஹீரோவின் அண்ணனாக இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு நான் வரவில்லை.
சம்முவின் (சண்முகப்பாண்டியன்) ரசிகனாக நான் இங்கு வந்திருக்கிறேன். 2012-ல் இருந்து சம்மு நடித்துக்கொண்டிருக்கிறார்.
அவருக்கு சினிமாவில் கிட்டதட்ட 13 வருட பயணம். இந்த 13 வருடத்தில் நிறையப் படங்களில் நடித்திருக்கலாம்.
ஆனால் சம்முவுக்கு இது 4-வது படம் தான். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாதப்போது படங்களில் நடிக்காமல் உடன் இருந்து பார்த்துகொண்டார்.

அந்த சமயத்தில் தான் அப்பா என்னை அரசியலுக்கு அனுப்பி வைத்தார். சில படங்கள் சம்முவுக்கு கைக்கூடவில்லை.
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சம்மு தைரியமாக நின்றார். 'நான் கேப்டன் பையன் நிச்சயம் ஜெயிப்பேன்' என சொல்லிக்கொண்டே இருப்பார்.
என்னால் முடியும் என்று இந்த 13 வருஷமும் அவருடைய ஃபேஷனை மட்டும் அவர் விடவே இல்லை" என்று பேசியிருக்கிறார்.


















