செய்திகள் :

கோவை சிறுமி கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

post image

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் மறுநாள் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் அச்சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் சிறுமியைக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்தததும், அவரது நண்பரான மோகன் குற்றத்தை மறைக்க உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மோகன்
மோகன்

கைது செய்யப்பட்ட கார்த்தியை ஜூன் 5ம் தேதி வரையிலும், மோகனை மே 27ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவலில் வைக்க சூலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நிதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே இன்று மோகனின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகின்ற ஜூன் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கார்த்தி மற்றும் மோகன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள இருவரிடமும் போலீசார் வழங்கினர்.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க