`கர்நாடகம், உத்தரவை கடைபிடிக்கவில்லை எனில்.!’ - காவிரி வழக்கில் அதிரடி காட்டிய உ...
சீனா: "இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 ஆண்டுகள் வாழலாம்" - சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு!
சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ்வதற்கான ஆராய்ச்சிகள் குறித்து பேசியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் சீனாவில் நீண்ட ஆயுள் குறித்து ஆராயும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, இன்னும் சில ஆண்டுகளில் 150 வயது வரை வாழ்வதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும் எனக் கூறியிருக்கிறது.
நியூயார்க் டைம்ஸ் தளம் கூறுவதன்படி, அந்த நிறுவனம் வயதாவதைத் தடுப்பதற்கான ஆண்டி ஏஜிங் மாத்திரைகளை உருவாக்குவதில் வெற்றிகண்டு வருகிறது.
திராட்சை விதைகளில் இருந்து எடுக்கப்படும் ரசாயனம் இந்த மாத்திரைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்ப்பதை விட விரைவாகவே ஆயுளை அதிகரிக்கும் மாத்திரைகள் பயன்படுத்தப்படும் எனக் கூறுகின்றனர்.
லோன்வி பயோசயின்சஸ் (Lonvi Biosciences) என்ற அந்த நிறுவனம் உருவாக்கும் திராட்சை விதை மாத்திரை, உடலில் உள்ள ஜாம்பி செல்களைக் குறிவைத்து செயல்படும். zombie cells என்பது சேதமடைந்த அதே நேரத்தில் இறக்காமல் உடலில் இருந்து தீங்கான வேதிப்பொருட்களை வெளியிடும் செல்களாகும். இவை வயதாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆய்வில் வெற்றிகண்ட திராட்சை விதை மாத்திரை!
தெற்கு சீனாவின் ஷென்சென் நகரத்தில் உள்ள லோன்வி நிறுவனம் திராட்சை விதையில் இருக்கும் பிரோசியானிடின் சி1 (Procyanidin C1) என்ற பொருளைக் கொண்டு அது உருவாக்கியிருக்கும் மாத்திரைகளால் மனித ஆயுளை 150 ஆண்டுகளாக உயர்த்த முடியும் என்கிறது.
அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரி லியு கிங்குவா, "150 ஆண்டுகள் வாழ்வது இன்னும் சில ஆண்டுகளில் யதார்த்தமானதாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
நேச்சர் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், விஞ்ஞானிகள் திராட்சை விதை சாற்றிலிருந்து கிடைக்கும் புரோசியானிடின் C1 (PCC1)-ஐப் பயன்படுத்தி எலிகளின் ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலத்தை வெற்றிகரமாக நீட்டித்துள்ளனர்.
விரைவில் உலகத்தலைவர்களின் ஆசையை நிறைவேற்றும் இந்த மாத்திரைகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.















