செய்திகள் :

செட்டிநாடு: ரூ.800 கோடி முறைகேடு? – கருப்பன் செட்டிக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு!

post image

செட்டிநாடு குடும்பத்தைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் மீனா முத்தையா மறைவுக்கு பின்னர், அவரது நெருங்கிய பணியாளரான கே.டி.ஆர். ராஜா கருப்பன் செட்டி எனும் கருப்பையா மீது எழுந்துள்ள ₹800 கோடி நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி முகமது ஷபீக் பிறப்பித்த உத்தரவின்படி, கருப்பன் செட்டி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனா முத்தையாவின் நம்பிக்கையை பெற்று அந்த தொடர்பை பயன்படுத்தி, செட்டிநாடு குடும்பத்துக்குச் சொந்தமான சுமார் ₹800 கோடி மதிப்பிலான சொத்துகள் மற்றும் நிதிகளை முறைகேடாக கையகப்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, குமார ராஜா முத்தையா பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளியின் உறுப்பினர் வி. பழனியப்பன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் விசாரணைக்கு வந்தது. இப்பள்ளி சென்னையில் இயங்கும் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை நிர்வகித்து வருவதால், மாணவர்களின் நலனும் இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மீனா முத்தையா
மீனா முத்தையா


மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜே. ரவீந்திரன், கருப்பன் செட்டி மீது குற்றச்சதி, மோசடி, ஆவண மோசடி, ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

புகாரின் படி, ஆரம்பத்தில் சாதாரண வீட்டு உதவியாளராக பணியில் சேர்ந்த கருப்பன் செட்டி, காலப்போக்கில் மீனா முத்தையாவின் நம்பிக்கையை பெற்று குடும்ப நிர்வாகம், தகவல் பரிமாற்றம் மற்றும் சொத்து விவகாரங்களில் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், மீனா முத்தையாவின் வயது மற்றும் உடல்நிலை பலவீனத்தை பயன்படுத்தி, அவரை உறவினர்களிடமிருந்து தனிமைப்படுத்தியதுடன், தனது குடும்ப உறுப்பினர்களையும் செட்டிநாடு குடும்ப அறக்கட்டளைகளில் இணைத்து, அவர்களது பெயர்களில் சொத்துகளை சேர்த்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செட்டிநாடு குடும்பத்தின் தொண்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிதிகளை அவர் எவ்வாறு முறைகேடாக எடுத்தார் என்பதும், குடும்பத்தின் தொண்டு நோக்கங்களை எவ்வாறு பாதித்தார் என்பதும் வெளிச்சத்துக்கு வரும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அறக்கட்டளையின் கணக்குகள் மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டை, உயர் நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால நிர்வாகியாக நியமித்த தொழிலதிபர் பி. விஜயகுமார் ரெட்டியிடம் ஒப்படைக்காததோடு, வங்கிக் கணக்குகளில் இருந்து தொடர்ந்து பணம் எடுத்துவருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 

`கை, கால்களை வெட்டினால்தான் சட்டத்தை மதிப்பார்கள்' - கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்

பெங்களூரை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மணிப்பாலில் கைதான மாணவர் அவருடன் சேர்ந்து படிக... மேலும் பார்க்க

மேகதாது: `எந்த முகாந்திரமும் இல்லை'- தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரி நீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து தமிழக அரசுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு | 77-வது நாளில் தீர்ப்பு

தூத்துக்குடியில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனையும், உடலில் பலத்த காயம் ஏற்படுத்தியதற்கு... மேலும் பார்க்க

NEET: `இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை!' – மத்திய அரசு, NTA-வை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!

2026-ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் யுஜி (NEET UG 2026) வினாத்தாள் கசிவு விவகாரம், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலை... மேலும் பார்க்க

Twisha Sharma case: `நீதிபதி குடும்பம் என்பதால் பாரபட்சமா?' - வழக்கை கையில் எடுத்தது உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது முன்னாள் நடிகை த்விஷா ஷர்மாவின் மரணம். மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில், தனது கணவர் வீட்டில் கடந்த மே 12-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் கண... மேலும் பார்க்க

``ஒவ்வொரு முறையும் ஜாமீன் வழங்க முடியாது" - உமர் காலித் மனுவை மீண்டும் நிராகரித்த நீதிமன்றம்!

டெல்லி கலவர வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள உமர் காலித் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தனது மறைந்த மாமாவின் 40வது நாள் சடங்கில் பங்கேற... மேலும் பார்க்க