செய்திகள் :

சென்னை கள்ளச்சாராய வழக்கில் பெண்ணை சிக்கவைக்க ஸ்பெஷல் டீம் போலீஸ் போட்ட மாஸ்டர் பிளான்; திடுக் தகவல்

post image

சென்னை, மயிலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் தெருவில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அங்கு சோதனை நடத்தி குடிநீர் கேன்களுடன் பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வனிதாவை (35) மயிலாப்பூர் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

வனிதா

சென்னைக்கு எங்கிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுகிறது என அடையாறு மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து அடையாறு மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட வனிதா, அவரின் கணவர் அப்துல்லா ஆகியோரின் பின்னணியை விசாரித்தோம். இவர்கள் மீது ஏற்கெனவே கள்ளச்சந்தையில் மது விற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் தற்போது வனிதாவை இந்த வழக்கில் வசமாக ஒரு டீம் சிக்க வைத்திருக்கும் ரகசிய தகவல் எங்களுக்குக் கிடைத்தது. உடனே சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர், கள்ளச்சாராயத்தை 20 லிட்டர் தண்ணீர் கேன்களுடன் வைத்துவிட்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து பார்த்திபனைப் பிடித்து விசாரித்தோம். அப்போது அவர், வனிதாவை சிக்கவைக்க கள்ளச்சாராய கேனை அங்கு வைத்ததாகக் கூறினார். அதோடு பாத்திபன், மயிலாப்பூர் துணை கமிஷனரின் ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த 3 காவலர்கள் கூறியதால்தான் அப்படிச் செய்தேன் எனவும் உளறினார். உடனே இந்தத் தகவலை மயிலாப்பூர் துணை கமிஷனர், உயரதிகாரிகளுக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம். கள்ளச்சாராயத்தைக் கடத்தி வந்த குற்றத்துக்காக பார்த்திபனைக் கைதுசெய்துள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் கூறுகையில், ``சட்ட விரோத மது விற்பனை வழக்கில் தொடர்புடைய வனிதா, சில மாதங்களாக தண்ணீர்கேன் பிசினஸ் செய்து வருகிறார். ஆனால் ஸ்பெஷல் டீமில் உள்ள 3 காவலர்கள் வனிதாவிடம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. ஏற்கெனவே கள்ளச்சாராய வியாபாரி பார்த்திபனுக்கும் வனிதாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. வனிதா மாமூல் கொடுக்காத ஆத்திரலிருந்த ஸ்பெஷ் டீம் போலீஸார், கள்ளச்சாராய வியாபாரி பார்த்திபன் மூலம் மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார்கள். இதற்காக பார்த்திபனை ஆந்திராவிலிருந்து கள்ளச்சாராயத்தை 20 லிட்டர் தண்ணீர்கேனில் அடைத்து சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறார் பார்த்திபன். பின்னர் வனிதாவின் தண்ணீர்கேன்களோடு கள்ளச்சாராய கேனையும் பார்த்திபன் வைத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார். அதன்பிறகு ஸ்பெஷல் டீம் போலீஸார், கள்ளச்சாராயம் விற்பதாகக் கூறி வனிதாவைப் பிடித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அதனால்தான் நாங்களும் வனிதா மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தோம். தறபோது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாரின் விசாரணையைத் தொடர்ந்து உயரதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்" என்றனர்.

போலீஸ்

காவலர்களைக் காட்டிக் கொடுத்த புது சிம் கார்டு

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் கொடுத்த ரிப்போர்ட்டை அடுத்து ஸ்பெஷல் டீமில் உள்ள போலீஸாரை ரகசியமாக கண்காணித்தோம். அப்போது அவர்கள் சமீபகாலமாக குறிப்பிட்ட ஒரு செல்போன் நம்பருக்கு அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது. அந்த சிம்கார்டு விவரங்களை சேகரித்தபோது அதை பார்த்திபன் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. பின்னர் வனிதா கைதானதும் பார்த்திபனிடமிருந்து அந்த புது சிம் கார்டை ஸ்பெஷல் டீம் போலீஸார் திரும்ப வாங்கியிருக்கிறார்கள். விசாரணை முடிவில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சென்னை: காதலன் வீட்டில் மாணவி தற்கொலை - மருந்து பிரதிநிதி கைது!

சென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்தவர் பூஜா (24). இவர், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ்குமார். இவர் மருந்து பிரதிநிதியாக வேலைப்பார்த்து வருகிற... மேலும் பார்க்க

`715 கோடிக்கு சொத்து; சகோதரியான மனைவி'- பெண் இன்ஜினீயரை திருமணம் செய்வதாகக் கூறி ரூ.1.53 கோடி மோசடி!

பெங்களூரைச் சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ (29). சாஃப்ட்வேர் இஞ்ஜினீயரான நவ்யா தனது திருமணத்திற்கு வரன் தேடி மேட்ரிமோனியல் தளத்தில் பதிவுசெய்து வைத்திருந்தார். விஜய் ராஜ் என்பவர் நவ்யாவின் குடும்பத்தை அணுகி நவ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் பதுங்கியிருந்த பிரபல சென்னை ரெளடி - துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தது எப்படி?

நெல்லை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏ பிளஸ், ஏ மற்றும் பி கிரேடு ரெளடிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் ரெளடிகளின் நகர்வு, அவர்களின் நடவடிக்கை குறித்தும் ரகசியமாக ... மேலும் பார்க்க

'பஸ்ஸில் தவறான நோக்கத்துடன் தொட முயன்றார்' - இளம்பெண்ணின் வீடியோ; தற்கொலை செய்த நபர்

கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் தீபக்(42). துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை செய்துவந்தார். இவர் வேலை செய்யும் நிறுவனம் சம்பந்தப்பட்ட பணிக்காக கடந்த வெள்ளிகிழமை கண்ணூர் சென்றார்... மேலும் பார்க்க

நெல்லை: செல்போனில் பேச்சு… கேட்காத அக்கா.. ஓட ஓட விரட்டிக் கொன்ற தம்பி; நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம், தேவர்குளத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். விவசாயியான இவரது மனைவி சவுந்தரி. இவர்களுக்கு ராதிகா என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், சவுந்தரியும், கண்ணனும் வேலூரில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

Share Market: டெலிகிராமில் 'டீச்சர்' விரித்த மோசடி வலை; நெல்லை இளைஞர் ரூ.30 லட்சத்தை இழந்தது எப்படி?

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்குக் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்து நாட்டு எண் கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து... மேலும் பார்க்க