போதை: பள்ளிப் பேருந்தின்மீது கல்வீச்சு;`ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில்'- எடப்பாட...
சென்னை: 100வது நாளை எட்டிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; ரிப்பன் மாளிகையில் போலீஸார் குவிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே பணிநிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 13 நாட்களாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறை கைது செய்தது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களின் வீடுகளில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போதும் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அல்லிக்குளம், உழைப்பாளர் சிலை, எக்மோர் மணியம்மை சிலை ஆகியவற்றின் அருகிலும், மெரினா கடற்கரையில், சென்னையில் மண்டலங்கள் 5 மற்றும் 6 அலுவலங்களின் அருகிலும் சாலைகளைச் சுத்தம் செய்து தொடர் போராட்டத்தை நடத்தி கைதாகினர்.
இந்நிலையில் இன்றுடன் (நவ 8) தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது. இன்று சென்னை ரிப்பன் மாளிகை முன்பு பெரும் போராட்டம் நடைபெறும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

இதை அறிந்த காவல்துறை தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு மீண்டும் கூடி விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பைப் போட்டிருக்கிறது. இன்று அதிகாலை முதலே சென்னை ரிப்பன் மாளிகையில் காவலர்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

















